24
குருவி, மயில், புறா, கொக்கு போன்ற பறவைகளும், மான், முயல், நாய், பூனை, ஆடு, வெள்ளெலி போன்ற சிறு விலங்குகளும் விற்பனை செய்யும் கடையாக இருப்பதைக் கண்டார்.
கடைக்காரர் "அய்யா அந்தக் கிளி உங்களுக்கு வேண்டுமா? நூறு ரூபாய்தான் மிக மலிவான விலை, வாங்கிக் கொண்டு செல்லுங்கள்" என்றார்.
கண்ணப்பர் மகள் இன்பவல்லி ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறு பெண்.
அவளுக்கு அன்றைய மறுநாள் பிறந்தநாள்.
பிறந்தநாள் பரிசாக இந்தப் பேசும் கிளியைத் தன் மகள் இன்பவல்லிக்குக் கொடுக்க முடிவு செய்தார் கண்ணப்பர்.
கடைக்காரனுடன் பேரம்பேசி எழுபது ரூபாய்க்கு அந்தப் பேசும் கிளியை வாங்கிக் கொண்டார்.
அந்தக் கிளியை எப்படி வளர்க்க வேண்டும் எந்த எந்தப் பொருள்கள் கொடுக்க வேண்டும். நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டை ஒன்றையும் கடைக்காரர் கொடுத்தார்.
கண்ணப்பர் வாங்கிவந்த அன்று கிளியைத் தன் அறையிலேயே வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் குளித்து முடித்து, உணவு உண்ணும் முன் இன்பவல்லி தன் அப்பாவை வந்து பார்த்தாள்.