பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

"அப்பா! இன்று என் பிறந்த நாள். வாழ்த்துங்கள்" என்று கூறி அவருடைய காலடிகளில் விழுந்து வணங்கினாள் இன்பவல்லி.

ஒவ்வொரு பிறந்த நாளிலும் தன் செல்ல மகளுக்கு நல்வாழ்த்துக் கூறுவதோடு ஒரு சிறு பரிசும் கொடுப்பது கண்ணப்பருடைய வழக்கம்.

சென்ற ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு தங்கச் சங்கிலி கொடுத்தார்.

இன்று, தன் அன்பு மகளை வாழ்த்தி அவளுக்கு மிகவும் விருப்பமான பச்சைக் கிளியைப் பரிசாகக் கொடுத்தார்.

இன்பவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அன்புப் பரிசான அந்தப் பச்சைக் கிளியின் பட்டுடலைத் தடவித் தடவித் தன் அன்பை வெளிப்படுத்தினாள்.

ஏற்கெனவே பேசத் தெரிந்த பச்சைக் கிளிக்கு மேலும் பல சொற்களைப் பேசப் பழகிக் கொடுத்தாள்.

அந்தக் கிளி மிக அறிவுள்ள கிளி. ஒரு தடவை சொன்னால் போதும், அதே சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லும். அழகாகச் சொல்லும்.

வீட்டில் உள்ள பூனை மியா மியா என்று கத்தினால் கிளியும் மியா என்று கத்தும். நாய் குரைப்பது போல் குரைக்கும். பசுவைப் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/27&oldid=1165206" இலிருந்து மீள்விக்கப்பட்டது