பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அம்மா என்று கத்தும். காக்கையைப் போல் காகா என்று கத்தும். வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் சொற்களையும் அப்படி அப்படியே திருப்பிச் சொல்லும்.

இவ்வளவு அழகாகப் பேசும் கிளியைத் தன் உடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் காட்ட வேண்டும் என்று நினைத்தாள் இன்பவல்லி.

இன்பவல்லி அறிவுள்ள பெண்ணாய் இருந்தாள். அப்பாவுக்குச் செல்லப் பெண்ணாக இருந்தாள். ஆனால் அம்மா சொல்லும் எந்த வேலையும் செய்ய மாட்டாள்.

ஒரு நாள். அம்மா அவளை அழைத்து, "இன்பவல்லி பக்கத்துக் கடையில் போய் கால் கிலோ பருப்பு வாங்கிக் கொண்டு வா" என்றாள்.

"போ அம்மா, உன்னோடு பெரிய தொல்லை" என்று கூறிவிட்டு அறையில் போய்க் கதை படித்துக் கொண்டிருந்தாள்.

மற்நொரு நாள், "இன்பவல்லி, அத்தை வீட்டில் போய் இந்தப் பலகாரங்களைக் கொடுத்துவிட்டுவா" என்றாள்.

அத்தை வீடு, அதே தெருவில் மூன்றாவது வீடு தான்.

இன்பவல்லி போக மறுத்துவிட்டாள்.

"எனக்கு நேரமில்லை அம்மா" என்று கூறி விட்டு விளையாடப் போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/28&oldid=1165207" இலிருந்து மீள்விக்கப்பட்டது