27
இன்னொரு நாள் அம்மா அவளைக் கூப்பிட்டு, "கண்ணே இன்பவல்லி, கடைக்குப் போய் இரண்டு தேங்காய் வாங்கி வா" என்றாள்,
"போம்மா? உனக்கு வேறு வேலையில்லை" என்று கூறிவிட்டு நாய்க்குட்டியுடன் விளையாடப் போய்விட்டாள்.
இதை எல்லாம் அந்தப் பச்சைக் கிளி பார்த்துக் கொண்டிருந்தது அவள் சொல்லிய சொற்களையும் நினைப்பு வைத்திருந்தது.
அன்று ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பச்சைக் கிளியைத் தூக்கிக் கொண்டு சென்றாள் இன்பவல்லி.
தன் தோழிகளிடம் "நான் சொன்னேனே. எங்கள் வீட்டில் ஒரு அதிசயக் கிளி இருக்கிறதென்று. அது இது தான்" என்று காண்பித்தாள்.
மாணவ மாணவியர் சூழ்ந்து கூடி நின்றார்கள்.
இன்பவல்லி தன் பச்சைக் கிளிக்கு "பவழம்" என்று பெயர் வைத்திருந்தாள்.
"பவழம்! இதோ பார் இவள் தான் மீனா. 'மீனா அக்கா நலமா?' என்று கேள் பார்க்கலாம்" என்று கூறினாள்.
மாணவ மாணவிகள் பச்சைக் கிளி பேசுவதைப் பார்க்க ஆவலோடு நின்றார்கள்.
பச்சைக் கிளி பேசியது.