பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அப்போது அங்கு நின்ற மீனா சொன்னாள்.

"இன்பவல்லி, கோபப்படாதே! பவழம் தவறாக ஒன்றும் பேசவில்லை. வீட்டில் உன் அம்மாவை நீ எதிர்த்துப் பேசிய சொற்களையே அது திருப்பிச் சொல்லியிருக்கிறது.

அது அறிவுள்ள கிளி. நீ அம்மாவிடம் அன்பு கொண்டிருப்பது உண்மையானால் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதை உனக்கு உணர்த்துவதற்காகவே, நீ அம்மாவிடம் மறுத்துச் சொன்ன சொற்களைப் பேசியிருக்கிறது.

நீ அம்மாவிடம் அன்பாகப் பேசு. அவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்.

பச்சைக் கிளியும் நல்ல சொற்களைப் பேசும்" என்று கூறினாள்.

இன்பவல்லி மீனா சொன்னதை ஒப்புக் கொண்டாள்.

"இனிமேல் நான் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன்" என்று கூறினாள்.

உடனே பச்சைக் கிளி,

நன்றி

வணக்கம் என்று கூறியது.

மாணவர்கள் எல்லோரும் பச்சைக் கிளியைப் பாராட்டினார்கள்.