பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கிழவர் ஆட்களை வைத்துச் சிறிய சுரங்கப் பாதை ஒன்றை அமைத்தார். சுரங்கக் கதவைப் பூட்டி அதன் சாவியைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டார். அவர் திட்டப்படியே கிழவரைக் கோட்டைக்கு வெளியே தள்ளி விட்டார்கள்.

வெளியில் வந்து விழுந்த கிழவரைக் கஞ்சபுரி வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.

"என்னை உங்கள் அரசரிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்று கிழவர் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறே அவர்கள் பஞ்சமுகனிடம் அவரை அழைத்துச் சென்றார்கள்.

"ஏய் கிழவா? நீ யார்? உன்னை ஏன் அவர்கள் வெளியே தள்ளி விட்டார்கள்?" என்று கஞ்சபுரி மன்னன் பஞ்சமுகன் கேட்டான்.

"அரசே, நான் ஒரு தவறும் செய்யவில்லை. நாட்டுப் பற்றின் காரணமாக சில நல்ல கருத்துக்களைச் சொன்னேன். கஞ்புரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். எதிர்த்து நின்று தோற்பதைவிட சமாதானமாகப் போய்விடலாம். பொருள்கள் நாசமாகாமல், உயிர்கள் வீணாகக் கொல்லப்படாமல் காப்பாற்றி விடலாம். நம்மால் வெற்றிபெற முடியாதபோது, சமாதானமாகப் போவது நல்லது என்று சொன்னேன். அவர்கள் என்னைத் துரோகி என்று பிடித்துத் தள்ளிவிட்டார்கள்" என்று சொன்னார் கிழவர்.