உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

"சரி, இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன்.

"அரசே, ஆட்சி செய்பவர்களின் மூடத்தனத்தினால் நாட்டு மக்கள் வீணாக அழிவதையோ கொள்ளையடிக்கப்படுவதையோ நான் விரும்பவில்லை.

நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன். புதிதாக ஒரு இரகசியச் சுரங்கம் அமைத்திருக்கிறார்கள், அதன் சாவி என்னிடம்தான் இருக்கிறது. நீங்கள் பொது மக்கள் வீடுகளில் சூறையிடுவதில்லை என்று எனக்கு வாக்குக் கொடுங்கள். நான் சுரங்கப் பாதையின் சாவியைத் தருகிறேன்.

அதன் வழியாகச் சென்று அரசரையும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கைது செய்து விடுங்கள். ஆட்சி எவ்வித போராட்டமும் இல்லாமல் உங்கள் கைக்கு வந்து விடும்" என்றான் கிழவன்.

"கிழவா , சுரங்கப் பாதை எங்கே இருக்கிறது?"

"அரசே, நான் இப்போதே தங்களை அழைத்துச்சென்று சுரங்கப் பாதையைத் திறந்து விடுகிறேன். எனக்கு வாக்குக் கொடுங்கள்" என்றான் கிழவன்.

"சரி, சரி நீ சுரங்கப் பாதை இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துக் கொண்டு செல்" என்றான் பஞ்சமுகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/39&oldid=1165219" இலிருந்து மீள்விக்கப்பட்டது