39
அவர் தான் தான் எதிரிகளை முறியடித்ததாகக் கூறி மன்னன் பேய்நாகனிடம் பெரிய பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்.
கிழவன் வந்தால் தன் சூழ்ச்சி தெரிந்து விடும் என்று அஞ்சினார். இரண்டு காவல் வீரர்களை அழைத்தார்.
"அந்தக் கிழவனை இழுத்துச் சென்று அடித்துக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்" என்று ஆணையிட்டார்.
அவ்வாறே அந்தக் காவல் வீரர்கள் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றார்கள். உடல் முழுவதும் காயம் ஏற்படும்படி நையப் புடைத்தார்கள்.
ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்கள். கிழவர் மயக்கம் அடைந்துவிட்டார்.
மயக்கம் தெளிந்து அவர் கண் விழித்துப் பார்த்த போது, அந்த வழியாகச் செல்லும் மக்களைப் பார்த்து,
"எதிரிகளைக் கொல்ல நான் தான் வழி செய்தேன், என்னை அடித்துப் போட்டுவிட்டார்கள், நான்தான் இந்த நாட்டைக் காப்பாற்றினேன்" என்று கூவினார்.