உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஒரு ஈயின் ஆசை

வானுலகத்தில் பிரமதேவன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அதாவது புதிய உயிர்களைப் படைத்துக் கொண்டிருந்தார்.

தங்க நிறமான களிமண்ணில் அமுத நீரை ஊற்றிப் பிசைந்தார். களிக் களியாய் வந்தவுடன் சின்னச் சின்ன உருவங்களாக கையினால் உருட்டினார். கண், காது, மூக்கு, தலை, வாய், கை, கால் எல்லாம் செய்தவுடன் அந்த உருவத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, படைப்பு மந்திரத்தைச் சொல்லி வாயினால் ஊதினார்.

உடனே அந்த உருவம், காற்று மண்டலத்தின் வழியாகப் பூவுலகத்துக்கு வந்து, யாராவது ஒரு பெண் வயிற்றில் கருவாக உட்கார்ந்துவிடும்.

இப்படி ஒவ்வொரு விநாடியும் ஓராயிரம் களிமண் பொம்மையைச் செய்து கொண்டேயிருந்தார்.

அப்போது அவர் மூக்கின் மேல் ஒரு ஈ பறந்து வந்து உட்கார்ந்தது. இடது கையால் அதை விரட்டினார். அது பறந்து போய் அவர் தோளிலே போய் உட்கார்ந்தது.

களிமண் பிடித்த வலது கையால் தோளிலே தட்டினார். அது தொடைக்குப் பறந்தது. மிகக் கவன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/43&oldid=1165226" இலிருந்து மீள்விக்கப்பட்டது