உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மாக கையால் பிடித்து முகத்துக்கு நேரே கொண்டு வந்து, 'ஏ சின்ன ஈ யே, ஏன் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டார்.

"கடவுளே, எனக்கு ஒரு வரம் வேண்டும்" என்று கேட்டது ஈ. என்ன வேண்டும்? சொல் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இன்று பொழுது சாய்வதற்குள் இரண்டு கோடி உயிர்களைப் படைத்தாக வேண்டும் என்று பரபரப்பாய்ப் பேசினார் பிரம்மா.

"தேவா, பல உயிர்களுக்கு நீங்கள் வால் வைத்துப்படைத்திருக்கிறீர்கள். ஈக்களாகிய எங்களுக்கு மட்டும் வால் இல்லை. எங்களுக்கு ஓர் அழகான வால்மட்டும் கொடுத்து விடுங்கள், நான் போய் விடுகிறேன்" என்றது ஈ.

"சின்னஞ் சிறிய கால்களை வைத்துக் கொண்டே, உலகில் பெரிய பெரிய நோய்களைப் பரப்புகின்றாய் நீ. வாலும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். நான் படைக்கிற உயிர்கள் எல்லாம் வேக வேகமாக மறைந்து போய்விடும்." என்று வருத்தப்பட்டார் பிரம்மா.

"கடவுளே நீங்கள் கொடுக்கும் வாலை நான் பத்திரமாக மேற்புறம் தூக்கி வைத்துக் கொள்கிறேன், தயவு செய்து எனக்கு வால் கொடுங்கள்" என்று கேட்டது ஈ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/44&oldid=1165225" இலிருந்து மீள்விக்கப்பட்டது