பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உனக்கு எப்படி இந்தப்பழைய செய்தி எல்லாம் தெரிய வந்தது? என்று வியப்புடன் கேட்டார் பிரம்மா.

நேற்று எங்கள் ஈக்காட்டுக்கு நாரத முனிவர் வந்தார். நாங்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தோம். மணம் உள்ள மலர் மாலைகளால் அவருடைய தோள்களை அலங்கரித்தோம். எங்கள் குறையையும் சொன்னோம். அவர்தான் தங்களிடம், எங்களின் வேண்டுகோளைச் சொல்லும்படி கூறினார். உடனே ஈக்களின் அரசனாகிய நான் புறப்பட்டு வந்தேன். ஓஓ! இது நாரதன் குறும்பா? இதோ பார்! ஈயே இலட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகளுக்கு புதிதாக வால் கொடுத்தது உண்மைதான்.

எப்படித் தெரியுமா? குரங்குகளின் அரசன் என்னை வந்து வால் கொடுக்கும்படி கேட்டான். வால் உள்ள உயிர் வகைகளில் யாராவது, தங்களுக்கு வால் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வாலை நறுக்கி உனக்கு ஓட்ட வைக்கிறேன் என்று சொன்னேன். உடனே குரங்கரசன் ஓடிச் சென்று அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மாமன்னன் மனுவை அழைத்து வந்தான். மனு தனக்கு வால் இருப்பது தொல்லையாக இருக்கிறது என்றும், அதைக் குரங்குகளுக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்வதாகவும் கூறினான். மனுவின் ஒப்புதலின் பேரில் மனிதர்களின் வால்களை வெட்டிக் குரங்குகளுக்கு வைத்தது உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/46&oldid=1165228" இலிருந்து மீள்விக்கப்பட்டது