46
"ஈயே, நீ நினைப்பது போல் என் வால் அழகுக்காக இல்லை. வால் இருந்தால்தான் என்னால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியும். இல்லாவிட்டால் பெரிய அவதியாகி விடும். ஆகையால் என் வாலைக் கேட்காதே. வேறு யாரையாவது போய்ப் பார்" என்றது மீன் அரசன்.
ஈ சோர்வடையவில்லை. நேராக ஒரு காட்டை நோக்கிப் பறந்தது.
காட்டில் ஒரு மரத்தில் இருந்த மரங்கொத்தியைப் பார்த்தது ஈ.
"மாங்கொத்தி, மரங்கொத்தி! உன் அழகான வாலை எனக்குத் தருவாயா? நீ ஒப்புக் கொண்டால் உன் அழகான வாலை எனக்கு ஒட்டி வைப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்" என்றது.
அந்த மரங்கொத்தி ஈயைப் பார்த்தது. "என் வாலை நான் என்ன அழகுக்காகவா வைத்திருக்கிறேன். நீ இப்போது பார்" என்று கூறி மரத்தைக் கொத்தத் தொடங்கியது.
அது தன் வாலை மரத்தின் மீது சாய்ந்துக் கொண்டு தன் முழு உடலையும் வளைத்துக் கொண்டு தன் மூக்கால் மரத்தில் வலிமையாகக் கொத்தியது. ஒவ்வொரு முறை மரத்தைக் கொத்தும் போதும், வாலை நன்றாக ஊன்றிக் கொண்டு, உடலை வளைத்து முழுசக்தியையும் பயன்படுத்தியது. ஒவ்-