பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

வொரு கொத்துக் கொத்தும் போதும் மரத்தூள்கள் சிதறி விழுந்தன. மரத்தில் துளை உண்டாக்கியது.

மரங்கொத்திக்கு வால் எவ்வளவு பயன்படுகிறது என்பதை ஈ நேரில் பார்த்தது. "மரங்கொத்தி மரங்கொத்தி! என்னை மன்னித்துக்கொள். நான் வேறு யாரிடமாவது போய் வால் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.

போகும் வழியில் ஒரு புதர் மறைவில் மான் ஓன்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய வாலைப் பார்த்ததும் ஈ அந்த மானை நோக்கிச் சென்றது.

"மானே மானே உன் அழகான சின்ன வாலை எனக்குத் தருவாயா? நீ தர ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய்?" என்று அன்போடு கேட்டது.

"என் வாலைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன்? வால் இல்லாவிட்டால் என் குட்டியைப் பறி கொடுக்க நேரிடுமே" என்று கூறியது மான்.

"உன் வாலுக்கும் குட்டிக்கும் என்ன தொடர்பு?" என்று வியப்புடன் கேட்டது.

"ஓநாய்கள் எங்களுக்குப் பகை. அவற்றின் வாயில் அகப்பட்டால் நாங்கள் தப்ப முடியாது. ஆகையால், விரட்டி வரும் ஓநாயிடமிருந்து தப்ப நாங்கள் தலைதெறிக்க ஓடுவோம். ஒடும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/49&oldid=1165231" இலிருந்து மீள்விக்கப்பட்டது