பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஓநாயின் கண்ணில் படாமல் ஏதாவது புதருக்குள் நான் பதுங்கிக் கொள்வேன். வெளியிலிருந்து பார்த்தால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பது என் குட்டிக்கு மட்டும் தெரிய வேண்டும். புதருக்குள் மறைந்திருக்கும் நான் என் வாலை ஆட்டுவேன். அதைக் கண்டு என் குட்டி நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளும். உடனே அதுவும் ஒளிந்து மறைந்து ஒடி வந்து என்னோடு சேர்ந்து கொள்ளும்" என்று விளக்கமாகக் கூறியது மான்.

வால் இல்லா விட்டால் மான் எவ்வளவு துன்பப்படும் என்று ஈ புரிந்து கொண்டது. மேலும் அதை வற்புறுத்திக் கேட்கக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பியது.

காட்டு வழியில் ஒரு நரி போய்க் கொண்டிருந்தது. அந்த வால் மாதிரி ஒரு சின்ன வால் இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணியது ஈ. உடனே அது நரியை நோக்கிப் பறந்தது.

"நரியண்ணா, நரியண்ணா. கடவுளிடம் நான் ஒரு வால் கேட்டேன். நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் வாலை எடுத்துச் சின்ன வால் ஆக்கி எனக்குத் தருவதாகக் கடவுள் சொன்னார். உங்கள் வாலைத் தந்து உதவுங்கள் அண்ணா. வால் இல்லாமலே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் அழகான வாலை எனக்குத் தந்து உதவி செய்யுங்கள் அண்ணா" என்று கேட்டது.