50
நேராகப் பறந்து சென்று பிரம்மாவின் முக்கின் மேல் உட்கார்ந்தது. மூக்கைத் தட்டியவுடன் பறந்து சென்று நெற்றியில் உட்கார்ந்தது, அவர் நெற்றியில் வகவைத்த போது அது பறந்து போய் முதுகில் உட்கார்ந்தது. முதுகுப்பக்கம் கையைக் கொண்டு சென்ற போது தலையில் உட்கார்ந்தது.
விரட்டி விரட்டி அலுத்துப்போன பிரம்மா, 'என்ன இது தொல்லையாக இருக்கிறது. இந்த இடத்தை விட்டுப் போகிறாயா இல்லையா?' என்று கேட்டார்.
'எனக்கு வால் வேண்டும். வால் தருகிறவரையில் சும்மா இருக்க மாட்டேன். கடவுளே என்னை எங்கெங்கோ சுற்ற வைத்தீர்கள். யார் யாரையோ கெஞ்ச வைத்தீர்கள், நானும் சுற்றாத இடமில்லை. பார்க்காத உயிர் இனங்கள் இல்லை. எல்லா விலங்குகளுக்கும் வால் தேவையாம். யாரும் தங்கள் வாலை இழக்க விரும்பவில்லை. அப்படிப் பயனுள்ள வாலை எனக்கும் தரவேண்டும். வால் தருகிற வரையில் உங்களைச் சுற்றிச்சுற்றி வருவேன்.
வால் இல்லாமல் உலகத்திற்குத் திரும்ப மாட்டேன் என்று சாதித்தது ஈ.
பிரம்மா மலைத்துப் போனார். இந்த ஈயிடமிருந்து எப்படித் தப்புவது என்று சிந்தித்தார்.
அப்போது அவர் பார்வை கீழ் நோக்கித் திரும்பியது.