51
கீழே பூவுலகில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பசுமாடு புல் மேய்ந்து கொண்டிருந்தது.
உடனே பிரம்மாவுக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது.
'ஏ ஈயே! எல்லாரிடமும் கேட்டாய், பசுவிடம் கேட்டாயா?' என்று கேட்டார்.
'இல்லை' என்றது ஈ.
'பார்த்தாயா? யார் கொடுக்கக் கூடியவர்களோ, அவர்களை விட்டுவிட்டு யார் யாரிடமோ கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்.
இப்போது நீ நேரே பசுவிடம் போ, அதன் வாலைக் கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு வா?' என்றார் பிரம்மா.
ஈ சொன்னது: கடவுளே, இப்போதே நேரே போகிறேன். பசுவிடம் கேட்கிறேன். அது கொடுக்க ஒப்புக் கொண்டால் சரி. இல்லாவிட்டாலும் நான் திரும்பி வருவேன். எனக்கு வால் கொடுக்கும் வரையில் உங்களை வேலை பார்க்க விடமாட்டேன்.
இப்படிச் சொல்லிவிட்டு நேரே பூவுலகிற்குத் தாவிப் பறந்து வந்தது.
இங்கே மலையடிவாரத்தில், பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த புல்லை ஒரு பசு அமைதியாகக் மேய்ந்து கொண்டிருந்தது.
அதன் முதுகில் வந்து ஈ உட்கார்ந்தது.