பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56

அடுத்த கணம் அந்தச் சிறுமி தலையில் அடிபட்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள். அவள் இறந்து போய் விட்டதாகப் பயந்து விளையாட்டுக்குக் கத்தி வீசிய அந்தச் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

அவன் தங்கைக்குப் பட்ட காயம் பெரியதாயிருந்த போதிலும், உயிருக்குக் கேடு உண்டாகவில்லை. அந்தக் காட்டின் அருகாமையில் வசித்த ஒரு கிழவியின் கண்ணில் அந்தச் சிறுமி தட்டுப்பட்டாள். அந்தக் கிழவி மந்திர வைத்தியம் தெரிந்தவளாகையால் அவள் விரைவில் அந்த வெட்டுக் காயத்தை ஆற்றிவிட்டாள்.

அந்தப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு நாள் கோயிலுக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த பிட்சு ஒருவரிடம் தங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிச் சோதிடம் கேட்டார்கள். அவருடைய வாக்கு நல்வாக்காக இருந்தது. அத்தோடு அவள் என்றும் புகழுடம்போடு இருப்பாள் என்றும் மலையும் கடலும் உள்ள வரை மக்கள் நினைவில் அவள் இருந்து வரும்படியான பேற்றை அடைவாள் என்றும் அவர் கூறினார்.

அந்தப் பெண்ணின் காயம் குணமடைந்த சமயம் மழை காலம் துவங்கியது. அவள் அடிக்கடி தன் அண்ணனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு அவன் மேல் கோபமேயில்லை. அவன் ஓடி விட்டானே என்று வருத்தமே கொண்டாள், உள்ளபடியே அவன் இல்லாமல் வீடு வெறிச்சோடிப்போயி-