இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது.
அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.
வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச்சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது.
பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம்.
கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.
சிங்கம் அதன் மீது பாயத் தயாராக இருந்தது.
நரி குள்ளநரி நல்ல தந்திரமுள்ள நரி. தெரியாத்தனமாக சிங்கத்தின் எதிரில் வந்துவிட்டது. ஆனால் அதன் மூளை உடனே வேலை செய்தது.
சிங்கத்தை ஏமாற்ற முடிவு செய்தது.
"ஏ சிங்கமே! நான் யார் தெரியுமா? நான் இந்தக் காட்டின் அரசன். என்ன துணிச்சல் இருந்-