உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தால் என் எதிரில் வருவாய்?" என்று வலுவான குரலில் கேட்டது.

"ஏ அற்ப நரியே! உனக்கு என்ன பைத்தியமா? இந்தக் காட்டின் அரசன் நான்தான் என்பதை யறிய மாட்டாயா? உன்னை நீயே அரசன் என்று கூறிக் கொள்ளுகிறாயே! உனக்கு அறிவு இருக்கிறதா?" என்று சிங்கம் கேட்டது.

"ஏ மூடச்சிங்கமே! நான் சொல்லுவதை நீ நம்ப வில்லையா? சரி என்னோடு வா, இந்தக் காட்டு விலங்குகள் என்னைக் கண்டு பயந்து ஓடுவதை நீயே உன் கண்ணால் பார்க்கலாம்" என்றது நரி.

"சரி அதையும் தான் பார்ப்போமே!" என்று கூறிச் சிங்கம் நரியுடன் புறப்பட்டது.

இரண்டும் சேர்ந்து காட்டைச் சுற்றின. சிங்கத்தைக் கண்டு பயந்து எதிர்ப்பட்ட விலங்குகள் ஓடி ஒளிந்தன.

அந்த மூடச் சிங்கம் எல்லா விலங்குகளும் நரியைப் பார்த்துப் பயந்து ஓடுவதாக நினைத்துக் கொண்டது. நரியிடமிருந்து தானும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடி ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டது.

நரி வெற்றி நடை போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது.

————————
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/66&oldid=1165259" இலிருந்து மீள்விக்கப்பட்டது