பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நன்றியின் உருவம்

முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான்; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான். அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவிபுரிந்து வந்தது.

ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக வெளியூர் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றான். வழக்கம் போல அவன் நாயும் கூடவே சென்றது.

போகும் வழியில் களைப்பாறுவதற்காக நன்றாகப் புல்வளர்ந்திருந்த ஓர் இடத்தில் தேவநாதன் படுத்தான். படுத்தவன் அப்படியே தூங்கிப் போய்விட்டான். அந்த நாயும் அவன் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.

திடீரென்று புகைநாற்றம் மூக்கைத் துளைத்தது. நாய் கண்விழித்துப் பார்த்தது. மிக அருகாமையில் காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.