பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அப்போதும் நாய் நெருப்பினூடே புகுந்து பாய்ந்தோடியது. தண்ணீரைத் தன் உடலில் நனைத்துக் கொண்டு ஓடிவந்து, புல்தரையை ஈரமாக்கியது. இடைவிடாமல் அது தன் வேலையைச் செய்து கொண்டே இருந்தது.

காட்டில் எரியும் நெருப்பு, தன் தலைவனை நெருங்கவிடாமல் செய்வதில் அது கண்ணும் கருத்துமாக இருந்தது. தன் உடலில் உயிருள்ள வரையில் அது தன் கடமையை விடாமல் செய்தது.

நெடுநேரம் கழித்துத் தேவநாதன் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தான். தன்னைச் சுற்றிலும் இருந்த காடு முழுவதும் எரிந்து சாம்பலாய்ப் போயிருந்த காட்சியைக் கண்டான். அதே சமயம் தான் தீயில் வெந்து சாகாமல் இருப்பதைக் கண்டு வியந்தான். தன்னைச் சுற்றிலும் இருந்த இடம் முழுவதும் ஈரம் மாறாமல்