பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஒரு கோட்டுக்கு வெளியே ...



அவன் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, பிறகு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இதற்குள் பஸ் டிரைவர் ஹாரன் மூலம் கத்தினார்.

"வரட்டுமா சரோஜா?"

"ஒரு தடவயாவது உலகம்மான்னு சொல்லுங்க."

"வரட்டுமா உலகம்மா, இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ரயில பிடிக்கலாம். வரட்டுமா? பேசேன் சரோஜா."

பஸ் நகரத் துவங்கியதால், அவன் அதற்குள் முண்டியடித்து ஏறிக் கொண்டிருக்கையிலேயே, அவன் கையாட்டி விடைபெறு முன்னாலேயே பஸ் போய்விட்டது.

"கடைசி பஸ்ஸா கடைசி சந்திப்பா" என்று தனக்குக் கேட்கும்படி சொல்லிக் கொண்டே, பல்போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாள் உலகம்மை.

11. அய்யாவை மீட்டு.....

லகம்மை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய், அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். ஓங்கி உயர்ந்த பனையில் அனாவசியமாக ஏறிய மனிதர், இப்போது சாய்ந்துபோன பனைபோல், மனிதர்களைப் பார்க்க விரும்பாதவர் போல், கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.

சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, வெளியே வந்தாள். இரவுப் பொழுதை 'எப்படிக் கழிப்பது?' என்று யோசித்தாள். கோனச்சத்திரத்தில் இரவு முழுவதும் இயங்கும் * மக்கடைகள் உண்டு, வருவோர் - போவோர்க்கு. குறிப்பாக லாரிக்காரர்களுக்குச் 'சரக்கு'க் கொடுக்கும் 'பலசரக்கு'க் கடைகளும் அங்கே உண்டு. அங்கே போய்ப் படுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. போலீஸ் நிலையக் காம்பவுண்டுக்குள் இருந்த பெண்களும், இப்போது போய்விட்டார்கள். மணி பத்துக்கு மேலாகிவிட்டது.

எவரிடமும் பேசாமல், தனித்திருக்க விரும்பிய உலகம்மை, அந்தப் பயங்கரத் தனிமையின் அசுரத்தனத்தில் அகப்பட்டவள்போல்