பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஒரு கோட்டுக்கு வெளியே ...



உலகம்மை, அவர் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு அது , தவறு என்று நினைத்தவள் போல், கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அய்யாவிடம் போனாள். அவர். அந்த நிலையிலும் அவளைப் பெருமையோடு பார்த்து. கம்பிகளுக்கிடையே கன்னத்தைப் பதித்து, அவள் தலையைக் கோதிவிட்டார்.


ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போலீஸ் ஜீப், மாரிமுத்து நாடாரோடு வந்திறங்கியது. வழி நெடுக. நாடாரிடம், சப் இன்ஸ்பெக்டரிடம் எப்படி எப்படிப் பேச வேண்டும், அவரைப் பற்றி எப்படி எப்படி எஸ்.பிக்கு (கவர்னருக்கு நகலோடு) கம்ளெயின்ட் எழுத வேண்டும் என்று பாடஞ் சொல்லிக் கொடுத்த ஹெட்கான்ஸ்டபிள், இப்போது இறங்கும் வே” என்று லேசாக அதட்டினார்.

ஜீப்பை விட்டு இறங்கி, படிமீது ஏறிய மாரிமுத்து நாடார் உள்ளே போய்க்கொண்டிருந்தபோதே, “சப்-இன்ஸ்பெக்டர் லார், பிரமாதம். போலீஸ் ஏற்பாடு ஏ கிளாசு. மந்திரியே என்கிட்டே சொன்னார்” என்று சொல்லிக்கொண்டு, விசாலமான அறைக்குள் நுழைந்தார். உலகம்மை, தன் கைகளை நெறித்துக் கொண்டாள்.

சப்-இன்ஸ்பெக்டர். அவர் பேசியதை இக்நோர் செய்துவிட்டு. “மாயாண்டி நாடார எதுக்காவ கோட்டுக்குள்ள அடச்சிங்க?” என்று நிதானமாகவும், அழுத்தமாகவும் கேட்டார். மாரிமுத்து நாடார் எடுத்த எடுப்பிலேயே, இதை எதிர்பார்க்கவில்லை. “மந்திரி வேற ஏதும் சொன்னாருங்களா” என்பார். நாம் உடனே, “ஆமா, உங்க பெயரக் கூடக் கேட்டார், நான் தங்கமான பையன்னு சொன்னேன்” என்று பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கற்பனை செய்து கொண்ட மாரிமுத்து அடிபட்டவர்போல் மிரண்டு போனார். சப்-இன்ஸ்பெக்டர் இப்போது கடுமையாகக் கேட்டார்:

“சொல்றது காதுல விழுந்துதாங்க? எதுக்காக மாயாண்டிய மாடுகள அடச்சி வச்சதுமாதிரி அடச்சி வச்சீரு சொல்லும்!”

“நான் அப்டி ஒண்ணும் பண்ணலிங்க.”

உலகம்மை, சப் இன்ஸ்பெக்டருக்கு ஒத்தாசை செய்தாள். \"எசமான் கர்ப்பூரத்த ஏத்துறேன். அவரு மவள் சத்தியமா அப்படிப் பண்ணலன்னு அணைக்கட்டும் பாக்கலாம்.”

சப்-இன்ஸ்பெக்டர், அவளைத் தட்டிக் கேட்பார் என்று எதிர்பார்த்த நாடார் எதிர்பார்த்த்து நடக்காததால் கோபமாகப் பேசினார்.