பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊருக்கு அவலாகி...

99



சப் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.

உலகம்மை, அய்யாவை ஆதரவோடு பிடித்துக்கொண்டு நடந்தாள், அதேசமயம், பலவேச நாடார் வந்திருப்பதைப் பார்த்தாள். அவரைப்பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். 'மகனுக்குப் பெண் கிடைப்பதற்காக மச்சினனிடம் நெருங்குகிறார். நிச்சயம் அந்த ஆளு அவரு நிலத்துல வீடு இருக்கக் கூடாதுன்னு சொல்லத்தான் போறாரு. அப்ப என்ன செய்யலாம். எங்க போறது' என்று நினைத்துக்கொண்டே, எண்ணம் இயலாமையாக, இயலாமை பெருமூச்சாக, அவள் 'ஒரே மூச்சில்' அய்யாவை ஆதரவாகப் பிடிக்கிறாளா அல்லது ஆதரவிற்காகப் பிடித்திருக்கிறாளா என்பது புரியாமல் ஊரைப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள்.

12. ஊருக்கு அவலாகி...

குட்டாம்பட்டிக்கு, கருத்துக் கணிப்பு நிலையங்கள் போல் அமைந்தவை அந்த ஊர் டீக்கடைகள். பள்ளிக்கூடத்திற்கு அருகே 'மெயின் பஜாரில்' இருந்த காத்தமுத்துவின் 'டீக்கடை' இதர கடைகளுக்கு வழிகாட்டுவதுபோல் அமைந்திருந்தது. அது 'டீக்கடை' என்று அழைக்கப்பட்டாலும், அங்கு தோசை, வடை, இட்லி முதலியவைகளும் விற்கப்படுவதுண்டு, கொஞ்சநாள் ஆட்டுக்கறிகூட இருந்தது. "ஊர்க்காரனுக்கு வயிறு பெரிசா இருக்கதுமாதிரி சட்டப் பையி பெரிசா இல்ல" என்று சொல்லிவிட்டு, அதை நிறுத்தி விட்டான் காத்தமுத்து. இன்னொரு விசேஷம். அங்கு தோசை, இட்லி வகையறாக்கள் அரிசியால் தயாரிக்கப்படுவதுபோல், கடைக்கு வரும் அக்கப்போர்கள், பொய்கள், புனைசுருட்டுகள், யூகங்கள், அபிலாலைகள், அத்தனையும் ‘ரா மெட்டிரியலாக' அதாவது கச்சாப் பொருட்களாகச் சேர்க்கப்பட்டு, அபாண்டமாகவும், சூடான செய்தியாகவும், சுவையான சம்பவக் கோவைகளாகவும் தயாரிக்கப் படுவதுண்டு. ஊர் வாய்க்கு உலமூடி இல்ல' என்ற பழமொழியை 'காத்தமுத்துவின் கடை வாய்க்கு' என்று திருத்திக் கொள்ளலாம். என்றாலும், காத்தமுத்து பலே ஆசாமி. எந்தவிதக் கருத்தையும் சொல்ல மாட்டான், அப்படிச் சொன்னாலும் சிரிப்பான்; இப்படிச் சொன்னாலும் சிரிப்பான். நெடிய மௌனம் ஏற்பட்டால். லேசாக எடுத்துக் கொள்வான். விஷயம், அவனே வரையறுத்திருக்கும் 'லெவலைத்' தாண்டுவது மாதிரி தெரிந்தால் பேசுபவனிடம் பாக்கியைக்