பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒடுங்கி நின்று...

115



வேண்டும். மேற்குப் பக்கத்தின் வடகிழக்குப் பகுதியும், கிழக்குப் பக்கத்தின் வடமேற்குப் பகுதியும் அடைக்கப்பட்டு விட்டதால், ‘எமர்ஜன்ஸி எக்ஸிட்டாக' இருந்த அந்த ஒற்றையடிப்பாதைதான் இப்போது ஒரே பாதை. அதன் வழியாக அவள் நடந்து அதை அடுத்திருக்கும் தோட்டத்துச் சுவரில் ஏறி. தோட்டத்தின் வரப்பு வழியாக நடந்து, கிழக்கே இருக்கும் புளியந்தோப்புக்கு வந்து அதற்குக் கிழக்காக இருக்கும் இன்னொரு தோட்டத்திற்குப் போய், அதை ஒட்டியுள்ள 'யூனியன்' ரோடில் மீண்டும் மேற்கே நடந்தால், அவள் ஊருக்குள் வர முடியும்.

உலகம்மை, எட்டுத் திசைகளில் ஏழு அடைபட்டுப் போனாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தாள்.

உலகம்மை அயராததைக் கண்ட, மாரிமுத்து - பலவேச நாடார்கள் முதலில் அசந்தார்கள். "பயமவா கோலத்துக்குள்ள பாஞ்சா நாம குடுக்குக்குள்ள பாய மாட்டோமோ?"

பாய்ந்தார்கள்.

கேட்பாரற்றும், நடப்பாரற்றும் கிடந்த அந்தப் பாதையில், முதலில் சின்னப் பிள்ளைகளை வைத்து மலங்கழிக்கச் சொன்னார்கள். இரவில் மாரிமுத்து கோஷ்டியின் ஆட்களும், இளவட்டங்களும் அங்கே 'ஒதுங்கினார்கள்.'

உலகம்மை ஒதுங்கி ஒதுங்கிப் போனாள், அப்படி ஒதுங்கிப் போன ஒருமாத காலத்தில், அந்தச் சின்ன இடம் தாங்க முடியாத அளவுக்கு அசிங்கமாயிற்று.

பொந்துக்குள் அடங்கிய பெருச்சாளியை 'மூட்டம் போட்டால்' புகை தாங்காமல், அது வெளியே வருவது போல், அவளும் ஊராரிடம் முறையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

'வழக்குப் பேசி' பைசல் செய்த அய்யாவு நாடாரைப் பார்த்தாள். ஏற்கனவே, மாரிமுத்து நாடாரிடம் குட்டுப்பட்ட அவர் 'பார்க்கலாம்' என்றார். பார்க்கலாம் என்றால் 'மாரிமுத்து நாடாரைப் பார்த்து கலந்த பிறவு பார்க்கலாம்' என்று அர்த்தம். "ஊரைக் கூட்டுங்க மாமா" என்று அவள் சொன்னதற்கு, "நீநெனச்சா கூட்டணுமா" என்று எதிர்க்கேள்வி கேட்டார். அப்படிக் கேட்டதை, உடனே மாரிமுத்து நாடாரிடம் சொல்ல வேண்டும் என்றும் துடித்தார். உலகம்மை, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, பொதுப்பாதையிலே இப்டி 'இருக்க'லாமா?" என்று