பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒடுங்கி நின்று...

119



"எத்தனயோ பேரு ஆடாத ஆட்டம் ஆடுனாங்க. அவங்கெல்லாம் எப்டி ஆயிட்டாங்கங்றது கண்ணாலேயே பாத்தோம். இப்ப நீங்க எல்லாருமா ஆடுறிங்க. அவ்ளவு பெரிய ராவணன் ஆடாத ஆட்டமா ஒங்க ஆட்டம்? ஆடுனவங்க அமுங்கிப்போன இடத்துல புல்லுகூட முளைச்சிட்டு. யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரத்தான் செய்யும்."

"ஊர்க்காரங்க ஒங்களக் கேக்காமப் போவலாம். ஆனால், காளியம்மா ஒங்கள மட்டுமில்லாம ஒங்களக் கேக்காதவங்களயும் கேக்காம போமாட்டா. இது கலிகாலம். நாம செய்யுறத நாமே அனுபவிச்சுதான் ஆவணும். பத்ரகாளி பத்தினின்னா , ஒங்கள நீங்க என்னைப் படுத்துற பாட்டுக்குக் கேக்காமப் போவமாட்டா. அவா பத்தினியா இல்லியான்னு பாத்துடலாம். கடைசி வரைக்கும் நல்லா இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க. என் வயத்துல எரியுற தீ ஒங்களப் பத்தாமப் போவாது!"

அசாத்தியமான தைரியத்துடன், வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்தவள் போல், விஸ்வரூபியாக, அவள் போய்க் கொண்டிருந்தாள்.

15. ஊர்ப்பகை மேலிட...

ஞ்சாயத்துத் தலைவர் பயந்துவிட்டார். அடுத்த தேர்தலிலும், தலைவர் பதவிக்குப் போட்டி போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே, சேரி ஜனங்கள் தங்கள் ஆள் ஒருவரை நிறுத்தப்போவதாகச் செய்தி அடிபடுகிறது. உலகம்மை வேறு, இப்போது பார்க்கிறவர்களிடத்தில் எல்லாம், "பஞ்சாயத்துத் தலைவரு ஒரு பங்காளிக் கூட்டத்துக்கு மட்டும் தலைவரா மாறிட்டாரு" என்று பேசிக் கொண்டிருக்கிறாள். கருவாட்டு வியாபாரி நாராயணசாமி வேறு "தலைவரு அவங்க ஆளுங்க இருக்க இடமாப் பாத்து லைட் போட்டுக்கிட்டார். குழாய்கள் வச்சிக்கிட்டார்" என்று பேசிக்கொண்டு வருகிறா+ உலகம்மையை, இப்படியே விட்டுவைத்தால், பலபேர் நாராயணசாமிகளாக மாறிவிடலாம், ஆகையால் அவள் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும் அல்லது கவனிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவருக்குத் 'தங்க ஊசியான' மாரிமுத்து நாடாரை, தன் கண்ணில் எடுத்துக் குத்திக்கொள்ள விரும்பவில்லை. அதோடு பலவேச நாடார் மாரிமுத்து நாடாரிடம்