பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒறுக்கப் பட்டு...

129



இருந்தது என்னவோ போலிருந்தது. எப்படியோ யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஓடி வந்தாள். நல்லவேளை, அவள் வீட்டின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருந்ததால், ஜாக்கெட்டால் அடைக்கப்படாமலிருந்த அவள் மேனியின் முதுகிற்கு அந்த வேலிக்காத்தான் செடிகளும், மூன்றடிச் சுவரும், அதன் மேலுள்ள முட்கம்பிகளும் கண்ணபிரான் போல் அபயமளித்தன. வீட்டுக்கு வந்ததும் இன்னொரு புடவையைச் சுற்றிக்கொண்டு, கிழிந்த ஜாக்கெட்டைத் தைப்பதற்காக ஊசியைப் பார்த்தாள். ஊசி இருந்தது, நூலில்லை. பொதுவாக அவள் நூல் வாங்கி வைப்பதில்லை. ஊரில் நாலைந்து டெய்லர் பையன்கள் இருக்கிறார்கள். பத்துப் பைசாவுக்கு 'ரப்' போட்டுவிடுவார்கள்.

இப்போதோ -

நூல் கொடுக்க ஆளில்லை. நாலைந்து தையல் மிஷின்கள் இருந்தாலும், மானத்தைக் காக்கும் அந்த ஒரே ஒரு ஜாக்கெட்டின் கிழிசலைத் தைக்க, அவற்றிற்கு 'ரோஷம்' கெட்டுப் போகவில்லை . ஒரு 'ஊக்கைப்' போட்டு, பின்புறத்தை மறைக்கலாமா என்றுகூட நினைத்தாள். முடியாது. ஊக்கு, இன்னொரு சின்ன ஓட்டையைப் போட்டு, அதுவும் இறுதியாகப் பெரியதாகிவிடும். என்ன செய்யலாம்? அவள் யோசித்தாள். வயக்காட்டிற்கும் போயாக வேண்டும். பானையில், அரைக்கால்படி அரிசிகூட இல்லை. ஜாக்கெட் இல்லாமல் போக முடியாது.

ஆனால் வயலுக்குப் போய் கூலி வாங்கி வந்தால்தான் அடுப்பு எரியும். அப்போதுதான் அய்யாவின் வயிறும் பசியால் எரியாது. ஏற்கனவே, நாலைந்து நாள் பெய்த மழையில், வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருந்தாயிற்று. ஆனால் வயிறு வெட்டியாக இருக்கவில்லை. 'பானையில் இருந்த அரிசியும் தீர்ந்து போச்சு. என்ன செய்யலாம்?'

மாயாண்டி. ஒரு யோசனை சொன்னார். அதன்படி. அவர், தான். கட்டியிருக்கும் வேட்டியின் முனையை. லேசாகக் கிழித்துவிட்டு, அதிலிருந்து நூலை உருவப்பார்த்தார். அது மிகக் கஷ்டமான காரியம். நெருக்கமாக இருந்த நூலிழைகள் வர மறுத்தன. அப்படி வந்தவை, ஓரங்குலம் வந்ததும் அறுந்து போயின. இற்றுப்போயிருந்த வேட்டியில் நூல்கள் ஏற்கனவே அற்றுப்போயிருந்தன. இயலாமை, கைகாலை நடுங்க வைக்க, "நீ இழுத்துப் பாரும்மா" என்று மகளிடம் வேட்டியைக் காட்டினார். நாற்றுக் கட்டுகளில் இருந்து ஒரு சின்னஞ்சிறு நாற்றைப் யாசித்தான் தியாகப் பொ இன்னொரு சிலை