பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒறுக்கப் பட்டு....

135



இல்லை; ஒற்றையடிப் பாதையில்லை. மூன்று பக்கம் முடக்கப்பட்ட குடிசையும் இல்லை. ஒதுங்கவும் இல்லை. நனவைப்போல், மாயையான கற்பனை நிலையில் ஏன் அவள் வாழக்கூடாது?

அவள் வாழ்ந்தாள்.

சில சமயம் அவளுக்குச் சந்தேகம் வருவதுண்டு. 'நாம இப்டி நினைக்கறமே. அவரும் இப்டி நினைப்பாரா? ஆமா அவருந்தான் எவ்ளவு ஆசையோட பாத்தாரு. அப்டின்னா, ஒரு லட்டரு போட்டிருக்கலாம். சீச்சி அது எப்டி முடியும்? போட்டா என்ன? ஆமாம் நீ எனக்கு எப்பவும் சரோஜாதான்னு சொன்னார். ஒருவேள சரோசா பேருக்கு ஜாபகமறதியா லட்டர் போட்டுருப்பாரோ? இருக்காது. அப்டி இருந்தா மாரிமுத்து வந்து இந்நேரம் குதிச்சிருப்பான். அவன் பொறுத்தாலும் பலவேசம் கத்தியிருப்பான். லெட்டர் போட்டிருக்கலாம். எப்டி? அவருதான் பூப்போட்ட ஆட்டுக்கடான்னு சொல்ல வேண்டியதச் சொல்லாமச் சொன்னபிறவு. எப்டி லெட்டர் போடுவாரு மொடவன் கொம்புத்தேனுக்கு ஆசப்பட்ட கததான் நம்ம கத. சும்மா எழுதியிருக்கலாம். சொகத்த மட்டுமாவது விசாரிச்சிருக்கலாம். ஒருவேள எழுதி அப்டி வந்த லட்டர போஸ்டாபீஸ் தடியன் கிழிச்சிருப்பானோ?'

சந்தேகங்களைத் தாங்க முடியாமல் அவள் மனம் அல்லோலகல்லோலப்பட்டது. அடிக்கடி, தபால்காரர் வருகிறாரா என்றுகூட எதிர்பார்த்தாள். அப்படி எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கே தெரிந்தாலும், அந்தப் பைத்தியக்காரியால் அந்த எண்ணத்தைத் தடுக்கவும் முடியவில்லை. கிட்டத்தட்ட தபால்காரரைப் பார்த்ததும் லோகு கடிதம் வந்தாலும் வந்திருக்கும் என்று அவள் அனிச்சையாகவே நினைக்கத் துவங்கிவிட்டாள். வயக்காட்டில் இருந்து வரும்போது, லோகுவின் லெட்டர் வந்திருக்கும் என்ற இன்ப எதிர்பார்ப்புடன் வருவதும், அது இல்லாமல் போவதால் எதையோ பறிகொடுத்ததுபோல் ஏங்கிப் படுப்பதும் அவளுக்கு வழக்கமாகிவிட்டது.

ஆனால், அன்று லோகுவைக்கூட நினைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை அவள் வீட்டின் வடக்குத் தோட்டத்துக்காரர், இனிமேல் அவள் அந்தத் தோட்டத்து வழியாக நடக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஊர்க்காரர்கள் அவரைக் குற்றஞ்சொல்கிறார்களாம். அவர் தோட்டத்துச் சுவரில் முள் கம்பி போடாட்டா அவர முள்ளா நெனச்சி தள்ளி வைக்கப் போறதா மிரட்டுறாங்களாம்! உலகம்மை, இன்னும் ஊர்க்காரங்க காலுல