பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ஒரு கோட்டுக்கு வெளியே ...



கையில விழாம இருக்கதுக்கு அவர் தோட்டத்துச் சுவரு சும்மா இருக்கதுதான் காரணமாம். தோட்டக்காரர் அவளிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். மாரிமுத்து நாடாரின் 'பிரஷ்ஷா' அதிகமானதை: அவர் பொருட்படுத்தாமல்தான் இருந்தார். இதனால், மாரி காரைக் கிளப்பி விட்டுவிட்டார். அதோடு தோட்டக்காரர், தன் பொண்ணுக்குப் பலவேச நாடார் மகன் துளசிங்கத்தைக் குறி வச்சிக்கிட்டு இருக்கார். மாரிமுத்து மூலமாத்தான் பலவேசத்தைப் பிடிக்க முடியும்.

கூண்டுக்குள் அடைபட்ட கிளிபோலவும், சிலசமயம் புலி போலவும் உலகம்மை அழுதுகொண்டும், உறுமிக்கொண்டும் இருந்தபோது. அவளே எதிர்பாராத அந்தச் சமயத்தில், தபால்காரப்பையன் 'ஒலகம்மா ஒனக்கு லெட்டர்' என்றான்.

உலகம்மைக்குப் பூமியோடு சேர்ந்து மேலே பறப்பது போல் தோன்றியது. தோட்டத்துக்காரர் சொன்னதுகூட இப்போது தூசி மாதிரி தோன்றியது. லோகுவே அங்கு வந்துவிட்டதுபோல் பரபரத்து தெற்குச்சுவரின் முட்கம்பியின் ஓட்டை வழியாகக் கையை நீட்டினாள்.

"குடு."

"கையெழுத்துப் போடணும்."

"லெட்டருக்கும் கையெழுத்து வேணுமா?"

"இது ரிஜிஸ்டர் லட்டர்."

உலகம்மை சிறிது யோசித்தாள். 'அவரு ஏன் ரிஜிஸ்டர்ல லெட்டர் எழுதணும்? இல்லேன்னா வேற யாராவது உடச்சிப் படிச்சிட்டா? தபால்காரன் குடுக்காம இருந்துட்டா? படிச்சவரு படிச்சவருதான்!'

'தபால்காரப்பையன் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, உறையை வேகமாகப் பிரித்தாள். அப்படிப் பிரித்ததில் உள்ளே இருந்த காகிதங்கூடச் சிறிது கிழிந்தது. அவசர அவசரமாக எடுத்தாள்.

எழுத்து. இங்கிலிஷில் டைப் அடிக்கப்பட்டிருந்தது. அவளுக்கு ‘இங்கிலீஸ்' தெரியாது. ஆனால் எழுதியிருப்பது 'இங்கிலீஸ்' என்பது தெரிந்தது. 'டைப் ஏன் அடிக்காரு?'

உலகம்மை மீண்டும் சிரித்துக் கொண்டாள். 'அவரு ஆபீஸரு. அஞ்சாறு பத்தாப்பு படிச்ச' ஆட்கள கட்டி மேய்க்கலாம். அவங்க டைப் அடிச்சி குடுத்திருக்கலாம். இல்லின்னா இவரே அடிச்சிருக்கலாம்.