பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. உற்றது பற்ற...

ன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை . அந்தக் கடிதத்தை நான்கைந்து மடிப்புக்களாக மடித்து, ஒட்டுப் போட்டுத் தைத்த ஜாக்கெட்டுக்குள். அய்யாவுக்குத் தெரியாமல் 'ரகசியமாக' வைத்துக்கொண்டாள். சந்தோஷம் தாங்க முடியாமல், நெடுநேரம் வரை, தூங்காமல் 'சுவரில்' சாய்ந்து கொண்டிருந்தாள். ஒரு சமயம் கண்விழித்த மாயாண்டிகூட, "ஏம்மா கலங்குற? ஊர்க்காரங்க பண்ணுறது வரைக்கும் பண்ணிப் பாக்கட்டும். காளியம்மா இருக்கா. அவா பொறுத்தாலும் சொள்ளமாடன் பொறுக்க மாட்டான் என்று ஆறுதல் சொல்லிவிட்டு, மகள் தூங்காமல் இருப்பதற்கு மனங்கலங்கி. அவரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.

உலகம்மைக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை, 'அய்யா தூங்கட்டும்' என்பதற்காக, அவளும் தன் ஓலைப்பாய் 'மெத்தையில்' படுத்தாள். அய்யா தூங்கிவிட்டார் என்று தெரிந்ததும், மீண்டும் உட்கார்ந்து கொண்டாள். விதவிதமான கற்பனைகள்! நடக்காத விஷயங்களைக் கற்பனை செய்த அவளுக்கு. நடந்த பயங்கரமான விஷயங்கள் கூட, அவ்வப்போது கற்பனையாகத் தோன்றின. அவள், பலதடவை நினைத்துக் கொண்டாள். 'சும்மாவா சொல்லுதாவ, மனந்தான் எல்லாத்துக்கும் காரணமுன்னு'.

நெடு நேரத்திற்குப் பிறகு. அவள் தூங்கினாள், கண்கள் மூடியிருந்தாலும் உதடுகள் சிரிப்பதுபோல் பிரிந்திருந்தன. இரவில் கடைசியாக அவள் மனதில் நின்ற அந்தக் கடிதத்தின் எண்ணம், தூங்கியெழுந்ததும் முதலாவது வந்தது. சின்னக்குழந்தை மாதிரி, 'கடிதம் தொலைஞ்சிருக்குமா?' என்று 'பயப்பட்டு' அதை எடுத்து வைத்துக் கொண்டாள். எழுத்துக்கள் அழிந்திருக்குமோ என்பதுபோல், அதை உற்றுப் பார்த்துக் கொண்டாள்.

'யாரிடம் காட்டலாம்? வயக்காட்டுக்குப் போகிற வழியில், சட்டாம்பட்டியில், படித்துவிட்டு வேலையில்லாமல் திரியும், எவனாவது ஒருவனிடம் காட்டலாமா? வேற வினயே வேண்டாம். எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல' என்கிறது மாதிரிதான். யார்கிட்டக் காட்டலாம்? யாரு நம்பிக்கையான ஆளு'.

திடிரென்று உலகம்மைக்கு குட்டாம்பட்டிச் சேரியில் பி.ஏ. படித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருக்கும் அருணாசலம் ஞாபகம்