பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஒரு கோட்டுக்கு வெளியே ...



நொறுங்கிப் போனதில், மேல் ஜாதிகள் ஆகும் இதுதான் பிரிவும், அங்கே போயிருக்கிறார்களாம். சில பெண்கள், பனையோலை நாரால் 'கொட்டப் பெட்டிகள்' பின்னிக்கொண்டிருந்தார்கள். சிலர் பனை ஓலையில் சாணிப்பெட்டி', 'கருப்பட்டிப்பெட்டி', 'கிண்ணிப்பெட்டி' ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள், விவசாய ஹரிஜனக் கூலிப் பெண்களின் கண்ணோட்டத்தில் இந்தப் பெண்கள் மேட்டுக் குடியினர்'; பலவித வண்ணக் கலவை நீரில், பல ஓலைகள் முக்கி வைக்கப்பட்டிருந்தன.

பொருளாதாரக் குவியல்போல், நான்கைந்து காரை வீடுகள் சேர்ந்து இருந்தன. இவற்றில் “தம்புறு மேளம்', 'தவில் மேளம்', 'பம்பை மேளம்', 'நையாண்டி மேளம்' முதலிய பல மேளங்களும், நாதஸ்வரங்களும். 'சிங்கிகளும்' சுவரில் தொங்கிக்கொண்டிருந்தன. இந்த வீடுகளில் இருப்பவர்கள்தாம் அந்தச் சேரியின் 'அண்ணாவிகள்', இவர்கள் கோவில், கல்யாண விசேஷங்களின்போது, வெளியூர்களில் போய், மேளமடிப்பார்கள். ஒருவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில்கூட. 'மேளம்' அடித்திருக்கிறார்.

மொத்தத்தில், 'குடித்துக் கெட்டும், கெட்டுக் குடித்தும், கெட்டு நொறுங்கிப்போன சேரி' என்று ஊர்க்காரர்களால் கைவிடப்பட்ட பகுதி அது. அதே நேரத்தில், மேல் ஜாதிகள் அவ்வப்போது வந்து. 'பட்டை தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் இடமும் இதுதான். தென்காசி போய், பல மாட மாளிகை கூடகோபுரங்களைப் பார்த்துவிட்டு, 'நாமுந்தான் இருக்கோமே' என்று நினைக்கும் கிராமத்து மக்கள் இந்தச் சேரிக்கு வரும்போதெல்லாம் தங்களை அறியாமலே, தங்களை ராக்பில்லர்களாகவும், டாடா, பிர்லாக்களாகவும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்களை நினைக்க வைக்கும் ஆற்றல் இந்தச் சேரிக்கு உண்டு. போலீஸ் கால்களிலும், தாசில்தார் கால்களிலும் 'யெசமான் எசமான்' என்று மந்திரம்போல் சபித்துக்கொண்டே விழுந்து கும்பிட்டுவிட்டு, 'நாமும் இப்டி இருக்க வேண்டியதுருக்கே' என்று சங்கடப்படும் கிராமத்து மக்கள், இவர்களைப் பார்த்ததும், தங்களை ராஜசிம்ம நரசிம்ம பல்லவர்களாகவும், கரிகால் பெருவளத்தானாகவும் நினைத்துக் கொள்ளலாம். இந்த அளவிற்கு, இந்த ஜனங்கள், அவர்களைப் பார்த்து அவர்கள் வெங்கர்களாக இருந்தாலும், "மொதலாளி, மொதலாளி' என்று நொடிக்கொரு தடலை சொல்வார்கள்.

இந்தச் சேரியால் பலனில்லை என்றும் சொல்ல முடியாது. *தொழில் கல்வி வேண்டும்' என்று சொல்லும் கல்வி நிபுணர்கள்,