பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதுங்கி வாழ்ந்து...

155


உண்ணாவிரதம் நின்று விட்டதாகக் கேள்விப்பட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த உலகம்மை, கையில் வைத்திருந்த இரண்டு வாழைப்பழங்களை, அவனிடம் நீட்டினாள். அவன் ஒன்றை வாய்க்குள் வைத்துக்கொண்டு. இன்னொன்றை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.

குட்டாம்பட்டிக்காரர்கள், உலகம்மையின் இந்தச் செயலை, மிக ஸீரியஸாக எடுத்துக்கொண்டார்கள். எதிரிகளுக்கு உதவும் ‘எட்டம்மையான’ அவளை, எப்படியாவது நிர்மூலப்படுத்திவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இப்போது கருத்து வேற்றுமை இல்லை. மேல்ஜாதியில் பிறந்து, மேல்ஜாதியில் வளர்ந்து, மேல்ஜாதியில் வாழும் ஒரு ‘பொம்பிளை’, மேல்ஜாதியினரைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் ‘கழுத களவாளிப் பய மவனும்’, ‘காவாலிப்’ பயலுமான அருணாசலத்திற்கு, எல்லார் முன்னிலையிலும், வாழைப்பழத்தைக் கொடுக்கிறாள் என்றால், அவளை வாழைக் குலையைச் சாய்ப்பதுபோல், சாய்க்கவில்லையென்றால், அவர்கள் இருந்ததில் பிரயோஜனமில்லை. குலத்தைக் கெடுக்க வந்த அந்தக் ‘கோடாரிக்காம்பை’, கோடாலியால்கூட வெட்டியிருப்பார்கள். அருணாசலத்தையும், அவன் பெட்டிஷன்களையும் கருத்தில்கொண்டு. உலகம்மையை வேறுவழியில் மடக்கப் பார்த்தார்கள்; நினைத்தார்கள். இப்போது ஊரே ஒரு மனிதனாகி, உலகம்மைக்கு ஜென்ம விரோதியாக மாறிவிட்டது. சேரி மக்களிடம் பட்ட அவமானத்தை, அவளிடம் பட்ட அவமானமாகக் கருதினார்கள். காககேட்டு. அது கிடைக்காத சிறுவன். கையில் இருக்கும் கண்ணாடியை வீசியெறிவது மாதிரி.

கொஞ்சம் மனமாறி வந்த பலவேச நாடார், ‘பள்ளுப் பறைகளோடு’ அவள் சேர்ந்து கொண்டதை அறிந்ததும், வெகுண்டார். “அருணாசலத்த வச்சிகிட்டு இருக்காள்” என்று இரண்டு மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தைக் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடார். பஞ்சாட்சர ஆசாரி, ராமையாத்தேவர் ஆகியோர் “வே, ஒமக்கு மூளை இருக்கா? அருணாசலத்த வச்சிக்கிட்டிருக்கான்னு சொன்னா நமக்குத்தான் அசிங்கம்! அடுத்த ஊருக்காரங்க, வச்சிக்கிட்டு இருந்தவள் உலகம்மன்னு அட்ரஸ்ஸா வச்சிக்கிட்டு இருப்பாங்க? மேல்ஜாதிப் பொண்ணக் கீழ்ஜாதிக்காரன் வச்சிக்கிட்டிருக்கான்னு எல்லாருடைய பொண்ணையும்தான் தப்பா நினைப்பாங்க! இது ஏன்வே ஒம்ம களிமண் மண்டையில் உரைக்கல?” என்று பலவேச நாடாரை நாயைப் பேசியது மாதிரி பேசி, அவர் வாயை ஆளுக்கொரு பக்கமாக அடைத்தார்கள். ‘புலி வருது புலி வருதுன்னு’ சொல்றது