பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

167



“வயசான மனுஷன் வாளுவாளுன்னு கத்துறான்; ஒழிஞ்சி போறான். பாலப்பாக்கதா, பால் காய்ச்சிற சட்டியப் பாக்கதா பலவேச மச்சான், அய்வராசாவ போயிச் சத்தம் போடும்!”

“நான் எப்டிடா போவ முடியும் பறப்பயலுக்கு அவன் மவா வாழப்பளத்தக் குடுத்து நம்மளக் கேவலப்படுத்துனா அது ஒனக்குப் பெரிசாத் தெரியலியா?”

“பொம்பிள புத்தி பின்புத்திதான? போவட்டும். போயிச் சொல்லிட்டு வாரும். ஆசாரி, நீராவது போயிட்டு வாருமே!”

“என்னவே செத்த பேச்சிப் பேசுறீரு மவள இவரால அடக்க முடியல! சேரிப்பக்கம் போவாம தடுக்க முடியல! பொன்னஞ்சட்டி மாதிரி. பொண்ண ஒழுங்கா நடத்தத் தெரியாம, இப்பக் கையக் காலப் பிடிச்சா எப்டிவே? ஊருன்னா கிள்ளுக்கீரையா? இல்ல தெரியாமத்தான் கேக்கேன்.”

“அப்போ நான் போவட்டுமா?”

“மானத்த உதித்திட்டு வேணுமுன்னா மகாராசனா போவும்: அப்புறம் வருத்தப்படாதேயும். அவ்வளவுதான் சொல்லுவேன்.”

“என் மானங்கெட்டாலும் பரவாயில்ல, நான் போகத்தான் போறேன்!”

“நானும் வாரேம்பா.”

“நானும் வாரேன்.”

“நானும்.”

“நா”

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மாரிமுத்து நாடார் எங்கிருந்தோ பிரசன்னமானார். அவரைப் பார்த்ததும், அவர் அங்கேயே வட்டி கேட்பார் என்று பயந்து சலசலப்பு அடங்கியது. மாரிமுத்து நிதானமாக, அழுத்தந்திருத்தமாக, நறுக்குத் தெறித்தாற்போல் பேசினார்.

“ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுங்கப்பா. ரெண்டு நாளைக்கி விட்டுப்பிடிப்போம்! ஒலகம்மையும் இவர மாதிரி தெருத்தெருவா பிச்சக்காரி மாதிரி அலைஞ்சி கண்டவன் காலுலல்லாம் விழுந்து கடைசில நம்ம கால்ல விழனும் விழுந்திடுவா. அதுவரைக்கும்