பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஒரு கோட்டுக்கு வெளியே ...



மாயாண்டி பிடரியைச் சிலிர்த்துக்கொண்டார். உலகம்மை, அவர்கள் கையில காலுல விழுவதாக இருந்தால், அவரே அவள் கைகாலை வெட்டிவிடப் போகிறவர்போல உடம்பை ஒரு தடவை உதறிக்கொண்டு. அனாவசியமாகப் பேசினார்:

“என்ன சொன்ன ஆசாரி உலகம்ம வந்து ஒங்க காலுல விழனுமா அவா நடந்துபோற தூசில அறுந்துபோற துசிக்கு நீங்க பெறுவியளாடா என்னமோ எளியவன் சொன்னான்னு இளக்காரமா பண்ணுறிய?”

“நீங்க வந்தாலும் சரிதான். வராம நாசமாப் போனாலுஞ் சரிதான். ஆனால் ஒண்ணு. நான் ‘நாடு நகர்’ சுத்தாத பனையேறிதான். அறிவுகெட்ட முண்டந்தான். ஆனால் மாரிமுத்து மாதிரி கசாப்புக்கறியக் குடுத்து காணி நிலத்த வாங்கல. ஒங்க மாதிரி தங்கத்துல பித்தளயச் சேக்கல அய்யாவுவ மாதிரி அரவட்டி வாங்கி ஏழபாழ வயத்துல அடிக்கல! பலவேசத்த மாதிரி சித்தி மவளயே வச்சிக்கிட்டு இருக்கல! கடவுளே கதின்னு நான் உண்டு என் பனைவுண்டுன்னு இருந்தவன்! என் வயித்துல அநியாயமா நெருப்பக் கொட்டிட்டிய! நீங்க இப்ப செய்றதுக்கு எப்பவாவது வாதத்துல விழுந்தாவது, லாரில கைகாலு போயாவது துள்ளத்துடிக்கக் கிடக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பிறக்கல.”

“வாயாடா பேசுறிய?” மாயாண்டி சிறிது மூச்சுவிட்டுக் கொண்டு, மேலும் தொடர்ந்தார்: “பொண்பாவம் பொல்லாததுடா. அது ஒங்களக் கேக்காம போவாதுடா பாப்போமாடா, பண்ணாடப் பயலுகளா?”

மாயாண்டி, தரையில் குனிந்து ஒரு பிடி மண்ணெடுத்து, அதை உள்ளங்கையில் ஏந்தி ஊதிவிட்டார்.

“இந்த மாதிரி நீங்க மண்ண ஈப் போவாட்டா, என்பேரு மாயாண்டி இல்லடா.”

கூட்டத்தினர். எதிர்பாராத இந்த வசவில் மாட்டி, என்ன பதிலளிப்பது, யார் முதலில் பதிலளிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில், மாயாண்டி போட்ட மண் துகள்கள், எல்லார் தலையிலும் ஏறின.

மாயாண்டி, வீட்டைப் பார்த்து ஓடினார். இதுவரைக்கும் வீராப்பாய் இருந்துட்டு, இப்பப்போய் முடிச்சி மாறிப் பயலுவ காலுல விழுந்துட்டமே, என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு, அதற்கு