பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"நான் இங்கே இருக்கது ஒனக்குப் புடிக்கலியா?"

அருணாசலம், வாயிலும் வயிற்றிலும் செல்லமாக அடித்துக் கொண்டான்.

"அநியாயம், அக்ரமம். ஏம்மா ஒன்ன போகச் சொல்ல எனக்கு மனம் வருமுன்னு ஒனக்கு நெனப்பு வந்ததே தப்பு! மேல் ஜாதியைச் சேர்ந்த பெண்ணை எத்தனை நாளைக்குத்தான் இங்க வைக்க முடியும்? வீட்டுக்குப் போகணுமுன்னு நினைச்சி அத எப்டிச் சொல்றதுன்னு யோசிக்கியோன்னு எண்ணிக் கேட்டேன்! என்ன இருந்தாலும் சேரியில் நீ இருக்க முடியுமா? நானுந்தான் இருக்கச் சொல்லலாமா? சொல்லப்போனால் உன்ன நீன்னு சொல்றதே தப்பு. எப்டியோ பேசிப் பழகிட்டேன்.

"ஒனக்கு இவ்வளவு ஞாபக மறதி இருக்கே. எப்டி படிச்சி தேறின?"

"என்ன அப்டிச் சொல்ற முதல் ஆளு நீதான்! ஒருவனப் பாத்துட்டா அவன் மூக்கு எப்டி இருக்கு, வாய் எப்டி இருக்குன்னு சாவது வரைக்கும் நினைவில் வைக்கிறவன் நான். அதாவது, அவன் சாவது வரைக்கும்! என் பார்வ அவ்ளவு மோசம்! நீண்ட நாளக்கி நினைவுல வைக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆசாமி அவுட்டாயிடுவான்!"

அருணாசலம் சிரித்தான். அந்தச் சிரிப்பு உலகம்மையையும் தொற்றிக்கொண்டது. சிரிப்பதை நிறுத்திவிட்டு, சீரியசாகவே கேட்டாள்:

, ”அதுக்குல்ல. மேல் ஜாதியில் இருக்கிற ஏழைபாளைங்களும் ஹரிஜனங்கதான். அவங்களும் ஹரிஜனங்களோடே சேரணு முன்னு நீ சொல்லிட்டு, இப்ப இந்த ஹரிஜனப் பொண்ண துரத் தாத குறையாத் துரத்துறது நியாயமான்னு கேக்குறேன்."