பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம்மை நடந்தாள்...

193


அன்பளிப்பாக வந்தது. மற்றவர்கள், கும்பா, ‘கொட்டப்பெட்டி’ ‘ஓலைப்பாய்கள்’ ஆகியவற்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். உலகம்மைக்கு ஒரு வாரத்திற்குப் போதுமான ‘அரிசி, புளி, பருப்பு, கொடுக்கப்பட்டன. கொட்டுமேளக் குதூகலத்தைப் பார்த்துப் பல சிறுவர்கள் நாட்டியங்கூட ஆடினார்கள். அருணாசலத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. ‘சே. முன்னாலேயே இங்க வந்திருக்கலாம். அய்யாவும் செத்திருக்க மாட்டார்’ என்று நினைத்துக் கொண்டாள் உலகம்மை. அவள் கண்கள். அவள் கண்ட அன்புக்காகவும், அய்யாவிற்காகவும் மாறிமாறிக் கலங்கின. அய்யா, அங்கேயே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

மறுநாள், ஊரில் இருக்கும் முன்னாள் வீட்டில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை எடுத்து வருவதற்காக, உலகம்மை புறப்பட்டாள். கூடமாட உதவி செய்ய முன்வந்த அருணா சலத்தையும், ஒருசில பெண்களையும் வர வேண்டாமென்று அவள் தடுத்துவிட்டு, ஓடையைக் கடந்து ஊருக்குள் நுழைந்தாள்.

எவர் கண்ணிலும் பட விரும்பாதவள்போல், வேகமாக நுழைந்து வீட்டுக்குள் போனாள். வீட்டைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு மடமடவென்று செப்புக்குடத்தை தலைகீழாக எடுத்து. தேங்கிப் போயிருந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு, குடத்திற்குள், ஈய டம்ளர்களை எடுத்துப் போட்டுவிட்டு, கரண்டியையும் அதில் போட்டாள். பானைக்குள் இருந்த அரைக்கால்படி அரிசியையும், அதில் கொட்டிவிட்டு, இறுதியில் அரிவாள்மணையை அதற்குள் திணித்தாள்.

வீட்டுக்குள் கிடந்த ஒரு சின்னக் கோணிப்பைக்குள், அம்மியைப் பெயர்த்துப் போட்டாள். பிறகு, பருப்பு. புளி வகையறாக்களுடன் இருந்த சில டப்பாக்களையும் இரண்டு ‘கும்பாக்களையும்’ எடுத்துப் போட்டாள். ‘விளக்குமாற்றை’