பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒயிலாய் நடந்து...

13


“அப்புறம், ஒம்ம பெரிய்யா மவன் நான் ரெண்டு மூட்ட நெல்லும் நாலு கோழியும் சொள்ளமாடங்கிட்ட கேட்டதா பொரளிய கிளப்பி இருக்கார். நல்லா இல்ல.”

“நம்ம கிராம முனிசிப்பா? நான் கண்டிக்கிறேன். வரட்டுமா?”

“அப்புறம், ஒம்ம சின்னய்யா மகங்கிட்ட சொல்லி, என் மவளுக்கு பாலசேவிகா வேல வாங்கிக் குடுக்கணும். பீ.டி. ஓவப் பார்த்தேன். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னா சரிங்றார்.”

“சொல்றேன், வரட்டுமா?”

“அப்புறம்...”

“அப்புறம் இருக்கட்டும். பிள்ளைவாள். சட்டாம்பட்டி சங்கரநாடார் குடும்பம் எப்படி? ஒரு பையன் இருக்கானாம்.”

“அந்த ஊர்ல அவன் எம்.ஏ. படிச்சவனாம். நல்ல பையன்னு கேள்வி. என்ன விஷயம்? அப்புறம் ஒம்ம கொழுந்தியா மவன்கிட்ட சொல்லும். வார லட்டர சீக்கிரமா கொடுக்க மாட்டேங்கறான்.”

“சங்கர நாடார் குடும்பம் எப்படி?”

“கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு காலத்துல... பனை ஏறுனாங்களாம்.”

“பனையேறிப் பய குடும்பமா?”

“ஒரு காலத்துல.”

“இப்ப இல்லியே?”

“இல்ல.”

“அப்படின்னா சரிதான்.”

“என்ன விஷயம்?”

“நாளக்கி சாவகாசமா சொல்றேன், வரட்டுமா?”

“செய்யும். அப்புறம்...”

மாரிமுத்து நாடார் கணக்குப்பிள்ளையைத் திரும்பிப் பாராமல் நடந்தார். உலகம்மைக்குப் பகீரென்றது. ‘பனையேறிப் பய குடும்பமான்னு மாமா நாக்கு மேல பல்லுப் போட்டுக் கேக்கறாரே. ஏன், இவரு தாத்தா பனையேறினாராமே. எங்க அய்யா மட்டுமா