பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஒரு கோட்டுக்கு வெளியே ...



சித்தப்பாவுக்கு மூளையே கிடையாது. பொண்ணுகூட வந்திருக்கிறவளுக்கு சித்தி - அதுதான் இவரோட பொண்டாட்டி - வயது இருக்கும். மறுபடிக்கு இப்டியா சந்தேகம் வாரது?

சித்தப்பாக்காரர் விடவில்லை.

"வே ராமசாமி, கோயிலுல முன்னால நிக்கரவா பொண்ணா , பின்னால நிக்கரவளா?"

"ரெண்டும் பொண்ணுதான்."

ராமசாமி சிரித்து மழுப்பினான். சித்தப்பாக்காரர் சீரியஸாகவே பேசினார்:

"வே ஒழுங்காச் சொல்லும். யாருவே, பொண்ணு செவப்பு சேலதான"

"செவப்புதான், செவப்புதான்."

மாப்பிள்ளைப் பையனுக்கு, சித்தப்பாவின் போக்குப் பிடிக்கவில்லை. "என்ன சின்னய்யா நீரு? துருவித் துருவிக் கேக்கியரு; இன்னுமா ஒம்மால பெண்ண பாக்க முடியல?"

சித்தப்பாக்காரர். அண்ணன் மகன் அந்நியர்கள் முன்னால் தன்னை மானபங்கப் படுத்திவிட்டதாக நினைத்தவர் போல், முகத்தைத் 'தொங்கப்' போட்டார். இதற்குள் சரோஜாவும், உலகம்மையும், பூசாரியோடு வந்தார்கள். உலகம்மை நேராக உடையாமல், தாறுமாறாக உடைந்திருக்கிற தேங்காயைப் பார்த்துவிட்டு "ஐயரே, தேங்கா ஒரு மாதிரி உடஞ்சிருக்கே" என்றாள்.

"பீட கழியுதுன்னு அர்த்தம்" என்று அனர்த்தம் கூறினார் ஐயர்.

உலகம்மையும் சரோஜாவும், கோவிலுக்கு வெளியே வந்து பிள்ளையாரை இறுதியாக வணங்குபவர்கள் போல் கைகளிரண்டையும் தலைக்குமேல் தூக்கிக் குவித்துவிட்டு மெள்ள நடந்தார்கள். சரோஜா. "மாப்பிள்ளன்னு ஒருவன் கிடச்சா சரிதான்" என்று நினைத்தவள் போல் பையனைப் பார்க்கவில்லை. உலகம்மை, மாப்பிள்ளைப் பையனை ஜாடைமாடையாகப் பார்த்தாள். 'சரோசாக்கா யோகக் காரிதான். பொறுத்தவர் பூமியாள்வார்னு சொல்றது சரிதான். காத்துக் கிடந்தாலும் கச்சிதமா கெடச்சிருக்கு. எவ்வளவு 'அளகா' இருக்காரு. சட்ட எப்டி மினுங்குது! அதுக்குள்ள கையுந்தான் எப்படித் தளதளப்பா இருக்கு. துணிமணிய எவ்ளவு சீரா போட்டுருக்காரு! இந்த ராமசாமியும்