பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓட நினைத்து...

55



"ஆயிரம் இருக்கும். அதுக்காவ தேவுடியாங்றதா? இவன் அம்மா மட்டும் யோக்கியமா?"

"சும்மா ஒங்களுக்குத்தான் பேசத் தெரியுங்றதுமாதிரி கத்தாதீங்க. ஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்துன்னு சொல்லுவாக. இந்த உலகம்ம என்ன பண்ணினா தெரியுமா? சட்டாம்பட்டில நிச்சயம் பண்ணின மாப்பிள்ளகிட்ட போயி எதையோ பேசி கலைச்சிட்டா. என் பொண்ணு வயசுல இருக்கிறவளுக, மூணு பிள்ள, நாலு பிள்ள பெத்துட்டா. ஆனால், நான் பெத்த பொண்ணு முப்பது வயசுலயும் கன்னி கழியாம இருக்கா. இப்ப கூடி வந்ததையும் இந்தப் பாதகி கெடுத்திட்டா! சரின்னு சொல்லிட்டுப் போனவங்க, இன்னக்கிப் பொண்ணு வேண்டாமுன்னு சொல்லியனுப்பிட்டாங்க."

பேச்சியம்மைக்கு 'வேலைக்காரிகள்' மத்தியில் அழ விருப்பம் இல்லை. இருந்தாலும் அழுதாள். அந்த அழுகை, பெண்கள் மத்தியில் ஒருவித 'இரக்கத்தைக்கூட' ஏற்படுத்தியது. பேச்சியம்மை, தன் மகள் கல்யாணம் நின்று போனதுக்காக அழுவதாகத்தான் அந்தப் பெண்கள் நினைத்தார்கள். அது உண்மையுங்கூட. அதேசமயம், 'கூலிவேல பாக்குற பொம்பிளைங்கிட்ட சரிக்குச் சமமா பேசும்படியாய் ஆண்டவன் வச்சிட்டாரே' என்று அதற்கும் சேர்த்து அழுதாள். 'என்ன! உலகம்மயா கலச்சா?' என்று கசாமுசா என்று பேசிக்கொண்டே பெண்கள் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதே நேரத்தில் உலகம்மை இல்லாமல் வயலுக்குள் போகவும் அவர்கள் விரும்பாதது மாதிரி தெரிந்தது. ஒருத்தி உலகம்மையிடமே, கேட்டாள்:

"நீ ஏம்மாளு கிடக்க முடியாம சட்டாம்பட்டிக்குப் போன?"

"போனாளோ போவலியோ? ஆயிரம் இருக்கும். அதுக்காக அவள வெளியேத்துறது நம்மள வெளியேத்துறது மாதிரி."

"இவளும் இப்படிப் போயிருக்கக்கூடாது. அதுக்காவ அவனும் அப்படிப் பேசியிருக்கக்கூடாது."

"இவா போயிருக்க மாட்டா. யாரோ கோள் சொல்லிட்டாங்க."

உலகம்மை, சக 'வேலைக்காரிகள்' கொஞ்சம் வீக்காகி வருவரைப் புரிந்து கொண்டாள். அதேசமயம் அவர்களிடம் விளக்கமாகச் செ ப அவள் விரும்பவில்லை சொல்லியும் அவள் விரும்பவில்லை. சொன்னாலும், அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும், அவள் செய்ததை அங்கீகரிக்க மாட்டார்கள். ஏன் அவளே. இப்போது தான் செய்தது சரிதானா என்பதுபோல் நேசிக்கிறாள்.