பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடியது கண்டு....

57



தலைகுனிந்து நடந்தவள் 'கனைப்புச்' சத்தங்கேட்டுத் தலை நிமிர்ந்தாள். பலவேச நாடார் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

"உலகம்மா உன்னோட உதலிய மறக்க முடியாது. நீ உண்மையிலேயே புலிக்குப் பொறந்தவாதான். நான் உன்ன என்னமோன்னு நெனச்சேன். அவன் மாரிமுத்துக்கு பயப்படாண்டாம். சின்னய்யா இருக்கேன். தைரியமா இரு. வீட்ட காலி பண்ணாண்டாம். அவன் வயலு போனா, என் வயலு இருக்கு. சட்டாம்பட்டிக்கு எப்ப போன? மாப்பிள்ளக் கிட்டயே சொல்லிட்டியா?"

உலகம்மை அவரை வெறுப்போடு பார்த்தாள்.

"நான் ஒண்ணும் ஓமக்குப் பயந்து போவல, எனக்கு அநியாயமா பட்டுது. அதனாலே போனேன். சொன்னேன். அவ்வளவுதான்."

உலகம்மை அவரை ஏறிட்டுப் பார்க்காமல் நடந்தாள். ‘மானங்கெட்டவன், மானத்த வாங்குறதுமாதிரி 'தொழில் பண்ணலாமுன்னு சொல்லிட்டு, இப்ப அதே வாயால சின்னையாங்றான். மானங்கெட்டதனமா பேசுறதும், அப்புறம் மானங்கெட்டதனமா 'அலத்துறதும்', தூ-'

'இந்த ஊர்ல எப்டித்தான் காலந்தள்ளப் போறோமோ' என்று தன்னை அறியாமல் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள். என்னவோ ஒன்று பயங்கரமாக நடக்கப் போகிறது என்ற அச்சத்தை விரட்டியடிப்பவள் போலவும், அதிலிருந்து ஓட விரும்புபவள் போலவும், அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனாள்.

7. கொடியது கண்டு .....

ரோஜாவின் கல்யாணம் நின்றுபோனதே, ஊர்ப் பேச்சாக இருந்தது. உலகம்மையை, சிலர் வெறுப்போடு பார்த்தார்கள். வழக்கமாக அவளிடம் பேசும் பலர், அவளைக் கண்டதும், 'ஒதுங்கிப்' போனார்கள். சிலர் பேசினாலும் பழைய அந்நியோன்யம் இல்லை. ஒருசிலர் "நீ இப்டி இருப்பன்னு கெனவுகூடக் காணல. ஒன்க்கு இதுல என்ன கிடச்சது?" என்றும் கேட்டார்கள். இதே பலவேச நாடார், மச்சினன் மகள் கல்யாண முயற்சிகளைப் பலதடவை தடுத்தபோது. ஊர்வாய் மூடிக்கிடந்தது. "பலவேச நாடாரு சமர்த்தன். அவரா கல்யாணத்த நடத்த விடுவாரு" என்று ஒருவித ‘ஹீரோ ஒர்ஷிப்'

கோ.5.