பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பேசிக்கொண்டு போனார்கள், உலகம்மை. காளியம்மன் சிலையைப் பார்த்தாள், கோவில் படிக்கட்டில் பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் நடக்க முடியாத மாயாண்டி ஓடாமல் இருப்பதற்காக, காவல் இருந்தார்கள். உலகம்மை அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, காளியம்மனைப் பார்த்தாள். பிறகு கத்தினாள்!

"அடியே, காளீ இவ்வளவு நடந்தப்பொறவும் ஒனக்கு அங்க இருக்க என்னடி யோக்கியத இருக்கு?"

பைத்தியம் பிடித்தவள் போல் கத்திய உலகம்மையைப் பார்த்து, ராம. வெள்ளைச்சாமிகள் பயந்து எழுந்தார்கள்.

8. கோட்டுக்குள் நடந்து...

குட்டாம்பட்டியில் இன்றும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. கடன்பட்டவரிடம் கொடுத்த கடனை கேட்டுப் பார்ப்பார்கள். அவன் 'இன்னிக்கு நாளைக்கி' என்று இழுப்பான். அவனிடம் பணத்தை வசூலிக்க முடியாது என்று தெரியும் போது, கடன் தந்தவர், சம்பந்தப்பட்டவனை இழுத்து வந்து அவனைச் சுற்றி ஒரு கோட்டைப் போட்டு முடக்கி விடுவார். வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்கு முன்னால், அவன் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது. எத்தனை நாளானாலும் சரி, அவன் குடும்பத்தினர். அங்கேயே, அவனுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் கிழித்தகோடு கிழித்ததுதான், அதைத் தாண்ட முடியாது. அதைத் தாண்டினால், கைகால்கள் சம்பந்தப்பட்டவனின் உடம்பிலிருந்து சம்பந்தப்படாதது மாதிரி தாண்டிவிடும்.

ஒருகாலத்தில் 'கொடி கட்டிப்' பார்த்த பரம்பரையினர் குட்டாம்பட்டிப் பரம்பரை. அதாவது குட்டாம்பட்டிப் பரம்பரை என்று ஆகுபெயராகக் கருதப்படும் அந்த ஊரில் உள்ள பணக்காரர்களின் பரம்பரை. முன்பெல்லாம், கருப்பன் கூட்டத்துக்கும், சிவப்பன் கூட்டத்துக்கும் சண்டையென்றால், ஒருவர் பனையில் ஏறி, கொடியைக் கட்டிவிட்டு 'அவிருடா பாப்போம்' என்பார். 'அவுக்கப் போறவன்' தலை விழும்; அல்லது அதைத் தடுக்கப்போறவன் தலை விழும்.

இப்போது நாகரிகம்' அந்த ஊரிலும் பரவிவிட்டதால், பனைமரத்தில் ஏறிக் கொடிகட்டிப் பார்ப்பதில்லை. பனைமரத்தில் பலருக்கு ஏறத்தெரியாது என்பதும் ஒரு காரணம். உயிரை ஒரு