பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஓய்வதில்லை

பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார், அவரின் காகித உறவு, சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாய்க்கப் பெற்றவர். எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் ?. த்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது. அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பான்மையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்