பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஒரு கோட்டுக்கு வெளியே ...



கற்றி நின்ற சாட்சிக்காரர்களைவிட, அந்தச் சண்டைக்காரரிடமே நேரடியாகப் பேசுவதென்று தீர்மானித்தாள், உலகம்மை.

"மாமா நீரு செய்தது உமக்கே நல்லா இருக்கா?"

மாரிமுத்து நாடார், அவளைக் கொலை செய்யப்போவது போல் பார்த்தார். 'சாப்பிட்டுப் போழா' என்று பாசத்தோடு ஒருசமயம் அவளிடம் சொன்ன அந்த முகம், இப்போது அவளையே சாப்பிடப்போவது போல் உள்ளடங்கிய பற்களை நெறித்துக் கொள்ள வைத்தது.

"ஓம்மத்தான் மாமா."

"எந்த மொகத்தோட என்னை மாமான்னு கூப்பிடுறழா? பனையேறிப் பய மவளுக்கும் எனக்கும் என்னழா சம்பந்தம்?"

"ஒம்ம தாத்தாவும் பனையேறினவருதான். நீரு மறந்தாலும் ஊரு மறக்காது."

"கூடக்கூட வாயி பேசுன இங்கயே வெட்டிப் புதச்சிடுவேன். எந்தப் பய என் கையை மோந்து பாக்கான்னு பாத்துடலாம். வாங்குன கடன குடுக்க வக்குல்லாதவளுக்கு வாயி வேறயா?"

"நான் குடுத்திருக்கிற வட்டியே முப்பது ரூவா வரும். ரெண்டார் ரூபாய் சம்பளத்துக்குக் கூப்புட்டாலும் ஒம்ம வயலுல ரெண்டு ரூபாய்க்கு நட வந்தேன்னா நீரு குடுத்திருக்கிற கடன நெனச்சித்தான் வந்தேன்."

"நானா ஒன் கையைப் பிடிச்சி இழுத்துக் கூப்பிட்டேன்?"

"வார்த்தய அனாவசியமா விடாதயும். நான் கேக்க முடியாம போனாலும் காளியாத்தா கேக்காம விடமாட்டா."

"சாடமாழா விடறே? சண்டாளி! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த துரோகி! ஒருத்தி வாழ்வயே பாழாக்கிட்டியாளா பாவி!"

"நான் பாழாக்க நெனச்சனா வாழவைக்க நெனச்சனான்னு அந்தக் காளியப்ப பெண்டாட்டிக்குத்தான் தெரியும்."

"ஜாலமாழா போடுற? கைகேயி! நீலி!"

"நீரு மட்டும் என்னக் காட்டி ஒருவன ஏமாத்தலாமா?"

"நான் ஏமாத்திட்டேன். நீ இப்ப அவங்கூட வேணுமுன்னா போழா."