பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோட்டுக்குள் நடந்து...

72


“வாய் கெட்டு பேசுனீர்னா வாயில கரையான் அரிக்கும்.”

“ஒங்குட்ட எதுக்குழா நான் பேசணும்? ஏல வெள்ளய்யா நீ வீட்டுக்குப்போல. அல்லன்னா தள்ளிப்போ. இப்ப சொல்றதுதான் வாங்குன கடன குடுத்திட்டு ஒப்பன கூட்டிக்கிட்டுப் போ.”

“முன்ன பின்ன சொல்லாம திடீர்னு ஒரு கிழவன அடச்சி வச்சா எப்டி?”

“நீ மட்டும் முன்னபின்ன சொல்லிட்டுத்தான் சட்டாம்பட்டிக்குப் போனியோ? அவங்கூட படுத்துட்டு வந்தியா படுக்காம வந்தியா?”

“யோவ், இதுக்குமேல பேசுன மரியாதி கெட்டுப் போவும்.”

பீடி ஏஜெண்டும், பிராந்தனும் அவளை நெருங்கினார்கள். அவர்களை இதுவரை தடுத்த மாரிமுத்து நாடார் கையைக் கட்டிக்கொண்டு பேசாமல் நின்றார். உலகம்மை இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுக்கப் போனாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. ஒண்ணுகிடக்க ஒண்னு நடந்தா சாட்சி சொல்ல வேண்டியது வரும். அதோடு பொம்பிளைய அடிக்க ரெண்டு ஆம்பிளைகள் போவதை, அந்த ஆம்பிளைகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பிரமுகர்களில் ஒருவர் முன்னால் வந்தார்:

“ஏய், வெள்ளயா இந்தப் பக்கமா வாடா ஏழா ஒலகம்மா, நீ கடன் பட்டுருக்கறது. வாஸ்தவம், மாரிமுத்து மச்சான் கைய கால பிடிச்சி கட்டாயமா தந்துடுறேன்னு சொல்றத விட்டுப்புட்டு ஏமுழா கத்துற?” மாரிமுத்து நாடார் ‘மத்தியஸ்தருக்கு’ப் பதில் சொன்னார்: “எனக்கு கையக்கால பிடிக்க பெண்டாட்டி இருக்கா. உலகம்மை இறுதி எச்சரிக்கை விடுபவள்போல் பேசினாள். இப்போது அவள் மனதில் அச்சமில்லை. முடியாமல் போனால் இடுப்பில் இருக்கவே இருக்கு கத்தி’

“மாமா! மாரிமுத்து நாடாரால அய்யாவ விட முடியுமா. முடியாதான்னு சொல்லும் நான் ஒண்னும் பிச்சகேக்கல. குடுத்த கடன தரமுடியாதுன்னு சொல்லல. அவரால முடியுமா முடியாதான்னு கேளும். அப்புறம் நீங்க என்மேல வருத்தப்படக் கூடாது.”