பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. கூண்டுக்குள் சென்று...

"லாக்கப்" அறைக்குள், மாயாண்டியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வெளியே பூட்டுப் போட்டுக் கொண்டே, பின்னால் வந்து நின்ற உலகம்மையைப் பார்த்து, "ஊர்ல எதித்துப் பேசினது மாதிரி இப்பப் பேசு பாக்கலாம்? ஒன்ன மொட்ட அடிக்காட்டாக் கேளு" என்று கொக்கரித்தார் ஹெட்கான்ஸ்டபிள். புகார் செய்தவளையே மடக்கிப் போட்ட ஹெட்கான்ஸ்டபிளின் சிருஷ்டி விநோதத்தைக் கண்களால் மெச்சிக்கொண்டே, ரைட்டர், அவரைப் பார்த்தார். ஹெட்கான்ஸ்டபிள் விளக்கினார்:

  • இவன் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்கான். அப்பன அடக்க வக்குல்லாம இவா ஆடுறா. ஒருவேள இவளும் குடிச்சிருக்காளோ என்னவோ? ஏய் ஊது பாக்கலாம்."

உலகம்மை சற்று விலகிப்போய் நின்று கொண்டாள். ரைட்டர், 'புரபஷனலாய்'ப் பேசினார்:

"டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டிங்களா?"

"வாங்காம வருவனா? ஏய் ஒன்பேரு என்ன? உலவா? இங்க நிக்கப்படாது. வெளில போ மொதல்ல."

"அய்யாவ எப்ப விடுவிங்க?"

"ஆறுமாசம் வாங்கிக் குடுக்காம விடப்போறதுல்ல. அப்பதான் ஒன் வாயி அடங்கும். சரி சரி போ."

ரைட்டர் இழுத்து இழுத்துப் பேசினார்:

"இங்கயே இருக்கட்டுமே."

ரைட்டர் தன்னைப் பார்த்துச் சிரித்த தோரணை, உலகம்மைக்குப் பிடிக்கவில்லை . போலீஸ் நிலைய 'ரகசியங்களைப் பற்றித் தப்பாகவோ, சரியாகவோ ஒருமாதிரி கேள்விப்பட்டிருந்தாள். என்ன தான் ஹெட்கான்ஸ்டபிள் மோசமானவராக இருந்தாலும் 'ரைட்டருக்கு’ப் பயந்துதான், தன்னை விரட்டுவதாக அவளுக்குத் தெரிந்தது.

உலகம்மை. அய்யாவைப் பார்த்தாள். அவர், ஏற்கனவே செத்துப்போனவர் போல், தலையில் கையை வைத்துக்கொண்டு