பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூண்டுக்குள் சென்று...

85



"அது வரக்கிம் எங்கய்யா அதுலதான் இருக்கணுமா?"

"நீ யோகக்காரி. எங்க வீட்டுக்காரரு நாலுநாளா இருக்காரு. இங்க வாரது லேசி. போறதுதான் கஷ்டம்."

"ஆமா இங்க எப்பவாவது பணக்காரங்க வாரதுண்டா ?"

"வருவாங்க, சிபாரிசுக்கு வருவாங்க.."

"குடிச்சவனுக்கு ஆறு மாசமுன்னா குடிக்க வச்சவனுக்கு எத்தன மாசம்?"

"ஒனக்கு வயசு எவ்வளவு?"

"இந்த புரட்டாசியோட பத்தொம்பது முடியுதுன்னு அய்யா சொன் னாரு."

சகஜமாகவும். சரசமாகவும் பேசிக்கொண்டிருந்த பெண்கள். தங்களுக்குள் 'தொழில் விவரங்களை' பேசத்துவங்கினார்கள். உலகம்மைக்கு முதலில் புரியவில்லை , அது புரியத் துவங்கியதும், அந்த இடத்தைவிட்டு புறப்படத் துவங்கினாள். அய்யாவுக்கு டீ ரொட்டி வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்தவள் போல், லாக்கப் அறைப்பக்கம் போனாள், மாயாண்டியோ, முதன்முறையாக, கரடு முரடில்லாத தரையில் படுத்த 'சுகத்தில்' குறட்டை விட்டுத் தூங்கினார். 'ஒன்றும் ஓடாதபோது, எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது. கடவுளே வந்தாலன்றிக் கதியில்லை என்ற சந்தர்ப்பம் வரும்போது, ஏற்படுமே பெருந்தூக்கம்' அது இப்போது மாயாண்டியை அரவணைத்துக் கொண்டது.

உலகம்மை, சிறிது நேரம் அங்கேயே நின்றாள். ரைட்டர் பார்வை, பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பார்வை மாதிரி இருந்தது. வெளியே வந்த உலகம்ழை அந்தப் பெண்கள் பக்கம் போனாள். அவளை அந்த சந்தர்ப்பத்தில் விரும்பாதவர்கள் போல், பேசிக் கொண்டிருந்த அவர்கள், பேச்சை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தார்கள்.

உலகம்மை போலீஸ் காம்பவுண்டிற்கு வெளியே வந்தாள். லேசாகப் பசியெடுப்பதுபோல் தோன்றியது. நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த சோதனை, இப்போது சாதாரணமாகத் தெரிவதைப் பார்த்து, அவள் ஆச்சரியப்பட்டாள். மெள்ள நடந்தாள். பஸ் நிலையத்திற்கு அருகே வந்தாள். இரவு ஒன்பது மணி இருக்கும். நல்லவேளை, அவளிடம் மூன்று ரூபாய் இருந்தது. முந்தானிச்