பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ஒரு சத்தியத்தின் அழுகை

"நீயும் ஆயிரத்தில் ஒருவனா ஆகிறாயா?” "என்னடா சொல்ற?" "குழந்தைக்கு இதுக்கு மேல் சொல்லணுமாக்கும். அவளை உனக்குக் கொடுக் கலாமுன்னு தீர்மாணிச்சிட்டோம்..."

நான் விச் துப் போனேன். இதற்குள் அவன் மனைவி, புன்னசை ஆக்க வெளியே வந்துவிட்டாள். எனக்கு என்ன சொல்வதெ6 றே தெரியவில்லை. கூடப் பிறக்காத சகோதரர்களாக இருக்கும் எங்கள் உறவை நிலைநிறுத்தத்தான் அவன் இந்தத் தீர்மானத்தைச் சொல்கிறான் என்பது புரிந்தது. சொல்லப் போனால், 'மைத்துணிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் என்பதைவிட, எனக்குப் பெண் பார்க்கிறான் என்பதே பொருந்தும். எனக்கு அவனது அந்தரங்க சுத்தி புரிந்தது.

ஆனால் என் மாமா மகள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களில் சிலவற்றை அவனே பலவந்தமாகப் பிடுங்கிப் படித்திருக்கிறான். ஒரு கடிதத்தில், 'அத்தான், உங்கள் நண்பர் மோகன் செய்யும் உதவிகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். கல்லூரியில் முதலாவதாக வந்த உங்களை, எப்படியாவது ஒரு நல்ல பதவியில் வைப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு என்னமோ, அவர் மீது கோபந்தான் வருகிறது. உங்களை மேலே மேலே கொண்டு போய், எனக்கு எட்டாக்கனியாக ஆக்கி விடுவாரோ என்று பயமாயும் இருக்கிறது.எனக்கு நீங்கள் வேண்டும் என்றால் உங்களுக்கு

பெரிய வேலை கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது அப்பட்டமான சுயநலம் என்பதை உணரும் போது, என்னை நானே வெறுக்கிறேன். ஆனால் ஒரு ஆறுதல், நீங்கள் 'வழி தவறிப்' போனாலும், உங்கள் நண்பரிடம் முறையிட்டு 'நான் உங்களை அபகரித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தாள். இதைப் படித்ததும் மோகன் திக்கித் திணறினான். அவன் பேசும்போது அவன் குரல் தழுதழுத்தது.

'ஒருவேளை அந்தப் பொண்ணு பயப்படறதுமாதிரி... நீ வழி தவறினால், மவனே ஒன் கையக் கால முறிச்சிப்புடுவேன்' என்று நிஜமாகவே மிரட்டினான். ஆகையால் அவன் தன் மைத்துணியைக் கட்டிக் கொள்ளும்படி சொன்னதில் ஆச்சரியப்பட்டு, ஒரளவு கோபப்பட்டு பேசாமல் இருந்தேன். மீண்டும் அவன்தான் பேசினான்.

"என்னடா... பதில் சொல்லுடா!" "மௌனம் சம்மதத்துக்கு அடையாளந்தானே" என்றாள் அவன் மனைவி.

"நீ சும்மா இரு... பாப்பா சொல்லட்டும்."

“ஏண்டா... நான் வழிதவறிப் போனால்... நீ கையைக் காலை முறிச்சாலும் முறிப்பியே." மோகன் நான் சொல்வதைப் புரிந்துகொண்டவன்போல் திடுக்கிட்டான்.