பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ஒரு சத்தியத்தின் அழுகை

"நான் உங்ககிட்ட வந்து சொல்லணுமுன்னு என்னை பலவந்தப்படுத்துனாரு அண்ணா! எனக்கு அவங்க ரெண்டு பேரையும் கட்டோட பிடிக்கல. இப்போ அவளோட அதிகாரந்தான். ரெண்டாவது தாரங்கூட இப்படி நடக்கமாட்டாள். அவள் புருஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து அவங்களை எங்கேயும் போகவிடாமல் கைக்குள் போட்டுக்கிடணுமுன்னு நினைக்கிறாரு தாலி கட்டின மனைவியையே இதுக்கு உடந்தையாய் இருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது எங்கேயாவது பார்த்திருக்கீங்களா..? அண்ணா..." "இதை நீ பொறுத்துக்கிடுறதா? என் கிட்டேயே பொய் சொல்லிட்டியே?"

"நான் என்னண்ணா பண்ண முடியும்? நான் உங்ககிட்ட சிபாரிசு

போனால் என்ன விதமாகப் பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும். அதனாலதான் அழுகையை அடக்கிக்கிட்டு, பல பேர்கிட்ட ஏச்சு

சிபாரிசு செய்தேன். ஒங்க வீட்டுக்கு நான் வந்தால் அண்ணிகிட்டே சொன்னாலும் சொல்லிடுவேன்னுதான். என்னை ஆபீசுக்கே கூட்டிக்கிட்டு

என் தங்கச்சிக்கு இப்டோ ஒரு குழந்தைகூட இருக்கு."

"ஆச்சரியமாய் இருக்கம்மா... ரொம்ப மாறிட்டானே... என்னால நம்பக்கூட முடியலியே. மோகனா இப்படி நடந்துக்கறான்?"

"அது என்னமோ அண்ணா. நீங்க போனதில் இருந்து ரெண்டு மாசம் வரைக்கும் அவரு பித்துப் பிடிச்சவரு மாதிரி இருந்தாரு. தூக்கத்திலேகூட சந்திரா, சந்திரா ன்னு கத்துவாரு... நான்தான் உங்களை விரட்டிட்டேன்னு என்னோடு அடிக்கடி சண்டைக்கு வந்தாரு தினமும் உங்களைப் பத்தித்தான் பேசுவாரு. இப்போது சனி மாதிரி அவள் வந்ததும் உங்களையும் மறந்துட்டாரு..."

"மோகன் ஆபீசுக்குப் போயிருக்கானா?” "இல்ல. சாத்தனுருக்குப் பிக்னிக் போயிருக்காங்க. இவருக்கும் அவளுக்கும். அவள் புருஷன் ஒத்தாசை பண்ண போயிருக்கான்." அவள் மீண்டும் அழுதாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன். அவள் அழுதுகொண்டிருக்கும் போதே நான் புறப்பட்டு விட்டேன். என் கண்ணிரை மறைப்பதற்கு இது தான் சிறந்த வழியாகத் தோன்றியது.

நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. என் பெயருக்கு வந்த தபால் உறையைப் பிரித்தேன். மோகன்தான் எழுதியிருந்தான். கோபாலனுக்கு வேலை கிடைக்கச் சிபாரிசு செய்த நான், பிறகு அந்தச் சிபாரிசை வாபஸ் வாங்கிக்