பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ஒரு சத்தியத்தின் அழுகை

'ஏம்மே... இப்படி கத்துறே... லைட்ட ஆப் பண்ணுனா பண்ணிட்டுப் போறாங்க... செத்தா பூடுவோம்."

வீட்டுக்காரம்மாவின் கணவனும், வயிற்றைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார். அவர் மனைவி, பால்கனியில் நின்றுகொண்டு ‘ராஜ்ய பரிபாலனம்' செய்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரர், வழக்கத்திற்கு மாறாக சமாதானம் சொன்னார். 'அஞ்சலை நீ போம்மா... அவளுக்கு அறிவில்ல... அறிவு கெட்ட மூதேவி... ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆப் பண்ணினால் என்ன?. என்னப்பா ராமு, ஹார்பார் வேல எப்படிக்கீது?"

"பரவாயில்லிங்க..." சரி... நீ போய் சாப்பிடு... நான் லைட் போடுறேன்..." விளக்கு எரிந்தது. மறுநாள், அஞ்சலை, குடித்தனக்கார பெண்கள் மத்தியில் கதாநாயகி ஆகிவிட்டாள். நான்கு நாட்கள், கேட்குமுன்னாலேயே 'லைட்' எரிந்து விட்டது. வுட்டுக்காரம்மாவும், அஞ்சலையைப் பார்த்து புன்னகை பூத்தாள்.

அஞ்சலைக்கு மனசு கேட்கவில்லை. வீட்டுக்காரய்யாவுக்கு எவ்வளவு பெரிய மனசு! பத்து ஆடுங்க வச்சிருக்காரு! கொஞ்சமாவது கர்வம் இருக்கணுமே! அவ்வளவு பெரிய மனுஷன் முன்னால, அவரு பொஞ்சாதிய அப்படிப் பேசியிருக்கக் கூடாது... நாலு அங்குல கனபரிமாண விபூதியுடன், பால்கனியில் உலா' வந்துகொண்டிருந்த அவரிடம் அஞ்சலை மெள்ள மெள்ள சென்றாள்.

"ஐயாவுக்கு பெரிய மனசு... நான் அற்பக் கயி த... வுட்டுக்காரம்மாவ... ஏடாகோடமா பேசிட்டேன்... ஐயா தான் மன்னிக்கணும்..."

வுட்டுக்காரர் விபூதித்துள் கீழே விழும்படியாகச் சிரித்தார். "இந்த வுலகத்துல... யாரு எதம்மா அள்ளிக்கினு போகப்போறா... ஏதோ இருக்கிற வரைக்கும் ஒருவருக்கொருவர் 'அட்ஜஸ்’ பண்ணியோணும்... நேற்றிருப்பார் இன்றில்லை... அம்மா உன்னப்பத்தி நேத்துகூட நல்லவிதமாத்தான் சொன்னாங்க... நீ, அவங்கள சத்தம் போட்டேங்கறது. நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது...”

"அம்மாவுக்குப் பெரிய மனசுங்க... நான் வர்றேங்க..." "அப்புறம்... அஞ்சல ஒரு சின்ன விஷயம்... கார்ப்பரேஷன் பாவிங்க வந்து எவ்வளவு வாடகை கொடுக்கிறேன்னு கேப்பாங்க. விடியாத்தம் வர்ராங்க... நீ வந்து, பத்து ரூபாய் கொடுக்கிறதாச் சொல்லு..."