பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடித்தனம் 31

"நீங்க இவ்வளவு பெரிய மன்சா இருக்கையில் நான் மட்டும் சின்ன மன்சா நடக்கிறது நாயமா? நீங்க சொன்னபடியே சொல்றேங்க... இந்த கக்கூலக்கு மட்டும் ஒரு தாழ்ப்பாள் போட்டிருங்க ஐயா..."

கார்ப்பரேஷன்காரர்கள் வந்தார்கள். அஞ்சலை உட்பட அனைவரும், முப்பது ரூபாயை பத்து என்று அடித்துச் சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போது அஞ்சலைக்கு மட்டும் என்னவோ போலிருந்தது.ஆட்டுக்காரஐயாவிடம்சொல்லி,கக்கூஸ் கதவுக்கு தாழ்ப்பாளும், பாத்ருமுக்குலைட்டும்,காவாவுக்குசுவரும் வைத்து விடலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

கார்ப்பரேஷன்காரர்கள் வந்துபோன அன்றே "லைட்டு: பழையபடியும் ஆறரை மணிக்குத்தான் எரிந்தது. ஒன்பதரை மணிக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஆப் ஆனது.

மறுநாள் ஆறு மணிக்கே மழைமேக மையிருட்டு, கொடிகட்டிப் பறந்தது. ஆட்டுக்கார ஐயாவும், அம்மாவும் பால்கனியில் உலா வந்தனர். அஞ்சலை போனாள்.

"அவருக்கு நைட் ஷிப்டு... சோறு பொங்கணும்... லைட் போடுங்க..."

வுட்டுக்காரம்மா ஆந்தை மாதிரி கத்தினாள். "இந்தா பாரு... இந்த ராங்கித்தனமெல்லாம்... என்கிட்டே வச்சுக்காதே... இஷ்டமுன்னா இரு... இல்லன்னா மருவாதியா காலிபண்ணிட்டு பூடு. நீ வச்ச ஆளுல்ல நாங்க... நேருக்கு நேர் பேசுற அளவுக்கு தில்லு வந்துட்டா... தத்தேரி மூதேவி."

"நான் இன்னா கேட்டேன்... நீ இன்னாம்மா... பேசுற... லைட்டு பூடுன்னா தத்தேரி கித்தேரின்னு கத்துறியே... ஆட்டுக்கார அய்யா நீயே சொல்லு. அவங்க பேசுறது. நாயமா...?"

'ஆட்டுக்காரய்யா திருவாய் மலர்ந்தருளினார். "உன்ன... நானும் கவனிச்சுக்கினுதான் வர்றேன். நீ நமக்குச் சரிப்படாது... நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்கு பொல்லாதவன்... சோம்பேறிக்குச் சோம்பேறி... அடுத்தமாசம் ஆட்ட காலி பண்ணியாகணும்..."

அஞ்சலைக்கு ஒன்றும் ஒட வில்லை. நேற்றிருப்பார் இன்றில்லை என்று தத்துவம் பேசிய ஆட்டுக் காரய்யா அடாவடித்தனமாகப் பேசுவதன் பொருள் புரியாமல் தன் இருப்பிட பொந்துக்குள் போனாள். கணவன் வரட்டும், இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று அவள் இள ரத்தம் கொதித்தது.

கணவன் வரவில்லை. ஒரு கார் வந்தது. அதில் ஒரு ஆள் வந்தார்.